முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. அதிரடி முடிவு: 3 வடிவிலான போட்டிகளிலும் புதிய விதிமுறைகள் அறிமுகம்

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2025      விளையாட்டு
ICC 2023 08 04

Source: provided

துபாய் : 3 வடிவிலான போட்டிகளிலும் தற்போதுள்ள விதிகளில் கணிசமான மாற்றங்களை ஐ.சி.சி. கொண்டு வந்துள்ளது.

அதிரடி முடிவு... 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சில புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதுபோக சில விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஐ.சி.சி.-ன் இந்த அதிரடி முடிவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கட்டாயமில்லை...

அதன்படி, பந்தின் மீது எச்சில் பயன்படுத்துவதற்கு தடை உள்ளது. ஆனால் பந்தின் மீது எச்சில் பயன்படுத்தப்பட்டது அறியப்பட்டால் பந்தை மாற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை.  ஆனால் இவ்வாறு செய்தால் தண்டனையாக பேட்டிங் அணிக்கு 5 ரன் வழங்கப்படும் நடைமுறை தொடரும். அதே சமயம் பந்தின் தன்மை மோசமாக சேதமடைந்திருந்தால் மட்டுமே நடுவர்கள் பந்தை மாற்றுவார்கள்.

காலுறையில் பட்டாலும்...

முன்னதாக விக்கெட் கீப்பர் பந்தை கேட்ச் செய்ததை எதிர்த்து ஒரு பேட்ஸ்மேன் அப்பீல் செய்யும்போது பந்து பேட்டில் பட்டதா? இல்லையா? என்பது 'அல்ட்ரா எட்ஜ்' தொழில்நுட்பம் மூலம் கண்டறியப்படும்.  இனி வரும் காலங்களில் பந்து காலுறையில் உரசியதால் அது எல்.பி.டபிள்யூ. முறையில் விக்கெட்டாக இருக்குமா? என்பதையும் 3-வது நடுவர் சோதிப்பார்.

தனியாக ரிவ்யூ... 

சில நேரங்களில் பீல்டர்கள் தெளிவான கேட்ச் பிடிக்காமல் வேண்டுமென்றே விக்கெட்டை கேட்பார்கள். அது போன்ற சூழ்நிலையில் கேட்ச் தெளிவாக இல்லையென்று கண்டறிந்தால் நடுவர் அதை நோ-பால் என்று அறிவிப்பார். ஒரு பந்தில் ஒரு பேட்ஸ்மேன் எல்.பி.டபிள்.யூ. மற்றும் ரன் அவுட்டாகிறார் என்றால் அந்த இரண்டையும் தனியாக ரிவ்யூ எடுக்கலாம். ஆனால் முதலில் எல்.பி.டபிள்.யூ. என்று தெரிய வந்தால் அது டெட் பால் என்று முடிவெடுக்கப்பட்டு விக்கெட் வழங்கப்படும். ரன் அவுட் சோதிக்கப்பட மாட்டாது.

கூடுதல் ரன்...

இனிமேல் நோ-பால் என்றாலும் கேட்ச் சோதிக்கப்படும். அது சரியான கேட்ச் என்றால், நோ-பாலுக்குரிய எக்ஸ்டிரா ஒரு ரன் எப்போதும் போல் வழங்கப்படும். ஆனால் அது துல்லியமான கேட்ச் இல்லை என்று தெரியவந்தால், அந்த சமயத்தில் பேட்ஸ்மேன் ஓடியிருந்தால் அதற்குரிய ரன்னும் சேர்த்து வழங்கப்படும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து