முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 34 பேர் உயிரிழப்பு

சனிக்கிழமை, 28 ஜூன் 2025      உலகம்
Gaza 2024-04-15

Source: provided

காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 56 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக காசாவில் மிக மோசமான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. காசா மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட உணவு பொருட்களை சுமார் இரண்டரை மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் நிறுத்தி வைத்துள்ளது. மே மாதம் முதல் மிகச் சிறிய அளவில் மட்டுமே காசாவிற்குள் உணவுப்பொருட்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஐ.நா. சார்பில் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்களை சிலர் கூட்டமாக வந்து கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்கள், குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை நடந்த தாக்குதல்களில் 34 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து