முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'அப்பா'விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை: இஸ்ரேல் மீது ஈரான் காட்டம்

சனிக்கிழமை, 28 ஜூன் 2025      உலகம்
Iran 2025-06-22

Source: provided

டெஹ்ரான் : இஸ்ரேலுக்கு 'அப்பா'விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் காட்டமாக தெரிவித்துள்ளது.

ஈரான் உச்ச தலைவரை படுகொலையிலிருந்து காப்பாற்றியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு ஒப்பந்தத்தை விரும்புவதில் உண்மையாக இருந்தால், ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா கொமேனியை அவமதிக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவரது மில்லியன் கணக்கான இதயப்பூர்வமான ஆதரவாளர்களை காயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

நமது ஏவுகணைகளால் தகர்க்கப்படுவதைத் தவிர்க்க, இஸ்ரேலுக்கு 'அப்பாவிடம்' ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உலகுக்குக் காட்டிய மகத்தான சக்திவாய்ந்த ஈரான் மக்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் அவமானங்களை தயவுசெய்து கவனத்தில் கொள்ளாதீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில், ஈரான் உச்ச தலைவர் கொமேனியை நன்றியுணர்வு இல்லாதவர் என்று குற்றம் சாட்டி, அவரை படுகொலையிலிருந்து காப்பாற்றியதாக தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஈரான் வெளியுறவு அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து