முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறு, குறு நிறுவனங்களின் புகாருக்கு விரைவில் தீர்வு : ஜனாதிபதி திரெளபதி முர்மு பேச்சு

சனிக்கிழமை, 28 ஜூன் 2025      இந்தியா
Murmu 2024-01-31

Source: provided

புதுடெல்லி : சிறு, குறு நிறுவனங்களின் பணப்பட்டுவாடா தாமத புகாருக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

உலக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், ஆன்லைன் சர்ச்சை தீர்வு வலைத்தளம் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரெளபதி முர்மு கலந்து கொண்டு பேசியதாவது:-

சிறு, குறு நிறுவனங்கள் நிதி தட்டுப்பாடு, கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டி, பணப்பட்டுவாடாவில் தாமதம் உள்ளிட்ட சவால்களை சந்தித்து வருகின்றன. மத்திய அரசின் முயற்சிகளால், பதிவு செய்யப்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொருட்கள் வாங்குவோருக்கும், சிறு, குறு நிறுவனங்களுக்கும் இடையிலான பணப்பட்டுவாடா தாமதம் குறித்த சர்ச்சைகளுக்கு இப்போது தொடங்கப்பட்டுள்ள வலைத்தளம் விரைந்து தீர்வு காணும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து