முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உஸ்பெகிஸ்தான் செஸ் போட்டி: பிரக்ஞானந்தா சாம்பியன்

சனிக்கிழமை, 28 ஜூன் 2025      விளையாட்டு
Pragnananda 2023-08-23

Source: provided

தாஷ்கண்ட் : உஸ்பெகிஸ்தான் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

10 சுற்றுகளின் முடிவில்... 

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் இந்த மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வந்தது. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஆர்.பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்று விளையாடினர். இந்தப் போட்டியின் 10 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரவ், மற்றொரு உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சின்டரோவ் ஆகியோர் தலா 5.5 புள்ளிகளை பெற்று சமநிலையில் இருந்தனர். இதையடுத்து சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது. 

4-வது இடத்துக்கு முன்னேற்றம்...

2 சுற்றுகளாக நடைபெற்ற டைபிரேக்கரில் 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும், சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு சுமார் ரூ.17 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச செஸ் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள குகேஷை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்துக்கு பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார். அவர் தற்போது 2778.3 புள்ளிகளைப் பெற்றுள்ளார். குகேஷ் 2776.6 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதன் மூலம் வரலாற்றில் முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் முதல் 5 இடங்களுக்குள் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து