முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்

சனிக்கிழமை, 28 ஜூன் 2025      விளையாட்டு
South-Africa 2023-12-24

Source: provided

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி புலவாயே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 

தொடக்க வீரரான டோனி ரன் ஏதும் எதுக்காமல் ஆட்டமிழந்தார். பிரீட்ஸ்கே(13), வியான் மல்டர்(17), டேவிட் பெண்டிகம்(0), அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 56 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டது. பவுமா, மார்க்ரம், ஸ்டப்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இல்லாததால் அந்த அணிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ப்ரிட்டோரியஸ்-ப்ரெவிஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 

__________________________________________________________________________________________________

நீரஜ் சோப்ரா முதலிடம்

ஈட்டி எறிதலில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவருமான இந்தியாவின் நீரஜ் சோப்ரா 1445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதனையடுத்து 1431 புள்ளிகளுடன் கிரெனேடியாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 2-வது இடத்திலும், 1407 புள்ளிகளுடன் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 3-வது இடத்திலும், ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷ்தீப் நதீம் 1370 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

__________________________________________________________________________________________________

தடகள வீராங்கனை சஸ்பெண்ட்

தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து இந்திய தடகள வீராங்கனை ட்விங்கிள் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 28 வயதாகும் ட்விங்கிள் சவுத்ரி, இந்த ஆண்டு உத்தராகண்டில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியின் 4x400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். மேலும் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்திலும் வெண்கலமும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் அவர் வென்றிருந்தார்.

இந்நிலையில் அவர் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதாகக் கூறி தடகள ஒருங்கிணைப்புப் பிரிவு (ஏஐயு) அவரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டது. தடை செய்யப்பட்ட மெத்தில் டெஸ்டோஸ்டெரான் என்ற மருந்தை அவர் பயன்படுத்தியுள்ளார். சஸ்பெண்ட் உத்தரவைத் தொடர்ந்து, அவருக்கு ஏஐயு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணைக் குழு முன்பு ட்விங்கிள் சவுத்ரி ஆஜராகி தன்னிலை விளக்கத்தை அளிக்கவேண்டும் என்றும் ஏஐயு உத்தரவிட்டுள்ளது.

__________________________________________________________________________________________________

பும்ராவாவுக்கு சோப்ரா பாராட்டு

இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா உள்ளார். இவர் ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். கிரிக்கெட் வீரர்களில் யார் ஈட்டி எறிதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என இவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பும்ரா ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. முழு உடற்தகுதியின் இருந்தால் பும்ராவால் ஈட்டி எறிதல் போட்டியில் சாதிக்க முடியும் என நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

__________________________________________________________________________________________________

இந்திய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள U19 இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 பலநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 5வது ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது. அவ்வகையில் நேற்று U19 இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 24 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய வைபவ் சூரியவன்ஷி 19 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து