முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்

திங்கட்கிழமை, 30 ஜூன் 2025      இந்தியா
ahmedabad-plane-crash-2025-06-12

Source: provided

புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் முரளிதர் மோஹுல் தெரிவித்துள்ளார். 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானம் முற்றிலுமாக எரிந்த நிலையில், கல்லூரி விடுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் தீப்பிடித்து எரிந்தது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விடுதி மற்றும் அருகில் உள்ளவர்கள் 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 260 உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே உலுக்கிய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் முரளிதர் மோஹுல் தெரிவித்துள்ளார். ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பிளாக் பாக்ஸ்-ல் இருந்து கிடைத்த ரெகார்டிங் அடிப்படையில், பல கோணத்தில் பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதாக அமைச்சர் விளக்கம் அளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து