முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீதை பிறந்த இடத்தின் வளர்ச்சிக்கு ரூ.883 கோடி: பீகார் அமைச்சரவை ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2025      இந்தியா
nitish-kumar

Source: provided

பாட்னா : பீகார் மாநிலத்தில், சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும், சீதாமார்ஹி மாவட்டத்திலுள்ள புனித தலங்களின் மேம்பாட்டிற்காக ரூ.882.87 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சீதாமார்ஹி மாவட்டத்திலுள்ள, சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும், புனௌரா தாம் ஜானகி கோயில் உள்ளிட்ட புனித தலங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்த ரூ.882.87 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை, நேற்று (ஜூலை 1) ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் நிதிஷ் குமார், புனௌரா தாம்மில் பிரம்மாண்ட கோயிலும், மற்ற கட்டமைப்புகளுக்கான கட்டுமானப் பணி விரைவில் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பிகாரின் சுற்றுலாத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரூ.137 கோடி செலவில் பழைய புனௌரா தாம் ஜானகி கோயில் புதுப்பிக்கப்படும் எனவும், ரூ.728 கோடி செலவில் அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீதமுள்ள தொகை அடுத்த 10 ஆண்டுகளுக்கு அந்தப் பகுதியை நிர்வாகிக்கப் பயன்படுத்தப்பட்டு, கோயிலை இணைக்கும் அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தப் புதிய கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ள நிலையில், பிகாரில் இந்தாண்டு (2025) இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து