முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      உலகம்
USA 2025-07-05

Source: provided

டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின், தென்- மத்திய டெக்சாஸ் மாகாணத்தின், மலைப் பகுதியில் அமைந்துள்ள கெர் கவுன்டியில் கடந்த 3 தினங்களுக்கு முன் பலத்த காற்றுடன் திடீரென கனமழை கொட்டியது. இதனால் குவாடலுாப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குவாடலுாப் நதியில் 45 நிமிடங்களில் 26 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து, கரையில் இருந்த குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். மேலும் குவாடலுாப் ஆற்றங்கரையோரம் இருந்த கிறிஸ்துவ கோடைக்கால முகாமில் தங்கியிருந்தவர்களில், 27 பெண்கள் மாயமாகி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

வெள்ளம் ஏற்பட்ட போது முகாமில் 700 பெண்கள் இருந்துள்ளனர். இறந்தவர்களில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கெர் கவுன்டியின் சராசரி ஆண்டு மழைப்பொழிவில் மூன்றில் ஒரு பங்கு மழை அதாவது, 30 செ.மீ., மழை ஒரே இரவில் பெய்துள்ளதே நிலைமை மோசமாக காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து