முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டு பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உறுதி

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      தமிழகம்
Shankar-Jiwal 2023 06 24

Source: provided

சென்னை : வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; கடந்த சில மாதங்களாக ஆபரேஷன் அகலி மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகர போலீசாருடன், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மத்திய அமைப்புகளுடன் இணைந்து, 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

அபு பக்கர் சித்திக் மீது தமிழகத்தில் 5 வழக்குகளும், கேரளாவில் இரு வழக்குகளும், கர்நாடகா, ஆந்திராவில் தலா ஒரு வழக்குகளும் உள்ளன. 2வது குற்றவாளி முகமது அலி, குண்டு வெடிப்பு சம்பவம் உள்ட 7 வழக்குகள் உள்ளன. ஆந்திராவின் கடப்பாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 3வது டெய்லர் ராஜா. தொடர்புடையவன். கர்நாடகா போலீசாருடன் இணைந்து கைது செய்யப்பட்டுள்ளான். விசாரணை தொடர்ந்து வருகிறது.  வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்ற நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெய்லர் ராஜா மட்டும் அல் உம்மா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது. மற்ற இருவருக்கும் எந்த அமைப்புடனும் தொடர்பில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர்.

போக்குவரத்து காவலர் செல்வராஜ் கொலை வழக்கில் டெய்லர் ராஜாவின் பெயர் இடம்பெறவில்லை. 1996ல் நாகூரில் சைதா கொலை வழக்கு, கோவை ஜெயில் வார்டன் பூபாலன், 1997ல் மதுரை ஜெயிலர் உதவியாளர் ஜெயப்பிரகாஷ் கொலை வழக்கு,1998ல் கோவை குண்டுவெடிப்பு வழக்குள் டெய்லர் ராஜா மீது உள்ளது. அபுபக்கர் சித்திக் வெடிகுண்டுகளை தயாரித்து வந்துள்ளான். அவன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தங்கியிருந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகளை தயாரிக்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து