முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 நாட்களுக்கு பிறகு கவின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Kavin-1 2025-08-01

திருநெல்வேலி, நெல்லையில் ஆணவக் கொலையான கவின் செல்வகணேஷ்  உடலை ஐந்து நாட்களுக்குப் பின்னர்  உறவினர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித்  கைது செய்யப்பட்ட நிலையில்,  அவரது பெற்​றோ​ரான சிறப்பு காவல் படை உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகிய இரு​வரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.  சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன், நெல்லை மாநகர போலீஸாரால்  கைது செய்யப்பட்டார்.  

இந்நிலையில், நெல்லையில் ஆணவக் கொலையான கவின் செல்வகணேஷ் உடல் அவரது தந்தை சந்திரசேகர், தம்பி பிரவீன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்குப் பின்னர் கவினின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

முன்னதாக, அமைச்சர் கே.என்.நேரு நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் ஆகியோர் கவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். கவின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து