முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிசம்பரில் இந்தியா வருகிறார் : கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி : தோனி - கோலியுடன் விளையாடுகிறார்?

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Marshi 2025-08-01

Source: provided

மும்பை : ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் வீரர்களுடன்... 

கால்பந்து உலகில் 8 முறை தங்கப் பந்து (பேலந்தோர்) வென்ற ஒரே வீரராக மெஸ்ஸி இருக்கிறார். மும்பையின் வான்கடே திடலில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வரும் டிச.11ஆம் தேதி மெஸ்ஸி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் 7 நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுடன் மெஸ்ஸி இணைந்து கிரிக்கெட் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தாவில்...

மும்பையை தவிர்த்து கொல்கத்தா, டில்லிக்கும் மெஸ்ஸி வரவிருக்கிறார். டிச.13 முதல் 15ஆம் தேதி வரை பல நிகழ்ச்சிகளில் மெஸ்ஸி கலந்துகொள்ளவிருக்கிறார். கொல்கத்தாவில் குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி உள்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இந்த நிகழ்வில் மமதா பானர்ஜி கலந்துகொள்கிறார். இவர் மெஸ்ஸியின் தீவிர ரசிகர். சமீபத்தில் மெஸ்ஸியின் கையெழுத்துப் பெற்ற ஜெர்ஸியை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

2-வது முறையாக... 

இந்தாண்டின் தொடக்கத்தில் கேரள அமைச்சர் மெஸ்ஸி அக்டோபர் அல்லது நவம்பரில் திருவனந்தபுரம் வருவதாகக் கூறப்பட்டிருந்தது. நட்புறவான போட்டி ஒன்றில் மெஸ்ஸி பங்கேற்க இருந்தது. பின்னர், இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பாக மெஸ்ஸி 2011-இல் கொல்கத்தா வந்திருந்தார். தற்போது, இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வரவிருக்கிறார்.

45 கோப்பைகள்...

38 வயதான மெஸ்ஸி 388 அசிஸ்ட்ஸ், 874 கோல்கள் அடித்துள்ளார். 8 பேலந்தோர், 6 ஐரோப்பியன் தங்கக் காலணிகள், 45 கோப்பைகளை வென்றுள்ளார். கடந்த 2022-இல் உலகக் கோப்பை வென்ற அவர் ஓராண்டில் 91 கோல்கள் அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து