முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பையா-டெஸ்ட் தொடரா? - பும்ரா தேர்வு குறித்து அகர்கர், கவுதம் காம்பீர் இறுதி முடிவு

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Gambhir 2023 09 14

Source: provided

மும்பை : பும்ராவை  டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட வைப்பதா? அல்லது  டெஸ்ட் தொடரில் விளையாட வைப்பதா? என்பது குறித்து  காம்பீர் மற்றும்  அகர்கர்  இறுதி முடிவு எடுப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.      

அடிக்கடி காயம்... 

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தான் ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டில் ஒன்று...

இந்திய அணி அடுத்ததாக ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்பின் இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. பும்ராவின் வேலைப்பளு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியதால் ஆசிய கோப்பை டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக விளையாட முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டில் ஒன்றில்தான் விளையாட முடியும்.

இறுதி முடிவு...

இதனால் பும்ராவை ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட வைப்பதா? அல்லது வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வைப்பதா? என்பது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர்மற்றும் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் ஆகியோர்தான் இறுதி முடிவு எடுப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து