முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓவல் டெஸ்ட்டில் டி.ஆர்.எஸ். சர்ச்சை: இங்கி. அணிக்கு உதவினாரா கள நடுவர்?

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Eng 2025-06-28

Source: provided

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் தொடர்பான சர்ச்சை எழுந்தது.

இங்கி. முன்னிலை... 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணியைக் காட்டிலும் இங்கிலாந்து 23 ரன்கள் முன்னிலை பெற்றது.

டி.ஆர்.எஸ். சர்ச்சை...

இங்கிலாந்தைக் காட்டிலும் 23 ரன்கள் பின் தங்கிய நிலையில், இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடியது.  இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியபோது, 13-வது ஓவரில் ஜோஷ் டங்கின் பந்துவீச்சில் சாய் சுதர்சன் தடுமாறி கீழே விழுந்தார். பந்து பேடில் பட்டதால் இங்கிலாந்து வீரர்கள் நடுவரிடம் அவுட் கேட்டு முறையிட்டனர். கள நடுவரான குமார் தர்மசேனா அவுட் கொடுக்க மறுத்து, பந்து பேட்டில் பட்டதாக சமிக்ஞை செய்தார்.

உதவுவது போன்று... 

அவர் சமிக்ஞை செய்தது பீல்டிங்கில் இருந்த இங்கிலாந்து அணிக்கு நடுவரின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செல்லலாமா? வேண்டாமா? என்பதற்கு உதவுவது போன்று இருந்ததால், அவரது சைகை சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முன்னாள் நடுவர் அனில் சௌதரி பேசியதாவது: கள நடுவரின் சைகை எதிரணிக்கு உதவியாக இருக்கும் எனக் கூறமாட்டேன். சில நேரங்களில் இது போன்று நடக்கும். ஆனால், சர்வதேசப் போட்டிகளில் நடுவரின் முடிவை மேல்முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் இருப்பதால், நடுவர் 15 விநாடிகளுக்கு எந்த ஒரு சைகையும் செய்யக் கூடாது.

அனுமதிக்கப்படுவதில்லை...

ஓவல் டெஸ்ட்டின்போது, கள நடுவருக்கு ஏதோ ஆகியுள்ளது. ஆனால், இதுபோன்று நடந்திருக்கக் கூடாது. டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் போட்டிகளில் நடுவர்கள் சைகைகள் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஏனெனில், அது உதவுவது போன்ற செயலாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ இதுபோன்ற விஷயங்கள் எப்போதும் நடக்கக் கூடாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து