முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டுமான பணியில் தொய்வு: அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Thangam 2024-09-14

விருதுநகர், விருதுநகர் அரசு அருங்காட்சியகம் கட்டுமானம் தொடர்பாக  பொதுப்பணித்துறை அதிகாரிகளை  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடிந்து கொண்டார்.

விருதுநகரில் வாடகை கட்டிடத்தில் இயங்தி வரும் அரசு அருங்காட்சியகத்திற்காக விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.6.80 கோடியில் தரைத்தளம் மற்றும் 2 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2024 பிப்ரவரி 26ம் தேதி கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் மூலம் இக்கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மாதம் 25ம் தேதி உடன் கட்டுமான ஒப்பந்த நிறைவடைகிறது. தற்போது 50 சதவீதம் மட்டுமே கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கட்டுமான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா முன்னிலையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்றுறு காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுமான பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கேள்வி எழுப்பினார். 

அப்போது அமைச்சர் பேசுகையில், ”நீங்கள் அருங்காட்சியகம் கட்டி முடிக்கும் வரை திறப்பு விழாவிற்காக முதல்வர் காத்திருப்பாரா ? என கேள்வி எழுப்பினார்.   கட்டுமான பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாதது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று அமைச்சர் அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். மேலும் ஒப்பந்ததாரரை அழைத்து விரைவில் கட்டுமான பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து