முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரி விதிப்பு விவகாரத்தில் சலுகை: சீனா மீதான வரிவிதிப்பு 90 நாட்கள் நிறுத்திவைப்பு : அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025      உலகம்
Trump 2024-11-06

Source: provided

வாஷிங்டன் : சீனா மீதான வரி விதிப்பை மேலும் 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர்  டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20-ந்தேதி பொறுப்பேற்று கொண்ட டொனால்டு டிரம்ப், பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதில் ஒன்றாக, நாடுகளுக்கு வரி விதிப்பதும் அடங்கும்.வரி வருவாயை கொண்டு நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டது போல் இருந்தபோதும், அதனை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தி டிரம்ப் உத்தரவிட்டார். பிரேசில் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதிப்பதற்கான உத்தரவிலும், சமீபத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இதேபோன்று, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு மற்றும் கூடுதல் அபராதம் ஆகியவற்றை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். சீனாவுக்கு 30 சதவீத வரி விதிப்பு அமலில் உள்ளது. முன்னதாக பரஸ்பர வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுத்ததால் அந்த நாட்டின் பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். பின்னர் இரு நாடுகளும் மேற்கொண்ட ஆலோசனைக்கு பிறகு அதனை நிறுத்தி வைத்தார். 

வர்த்த ஒப்பந்தம் ஏற்படுவதற்காக இந்த வரி விதிப்பை நிறுத்தி வைத்து டிரம்ப் அறிவித்தார். இதற்கான கெடு நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிந்த நிலையில், தற்போது மேலும் 90 நாட்களுக்கு அவகாசத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இந்தியாவுக்கு கெடு முடியும் முன்பே வரியை விதித்த டிரம்ப், சீனாவுக்கு மேலும் 90 நாட்கள் அவகாசத்தை நீட்டித்து இருப்பது சீனாவுக்கு சலுகை காட்டும் வகையில் அமைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து