எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். மிகுந்த பரபரப்பான இந்தச் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம். குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள முடியாத வகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினரோடு கூடத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா? இந்தக் கொடூரமான நடவடிக்கையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை? அப்படிக் கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்? அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
தூய்மை பணியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்கு
13 Aug 2025சென்னை, தூய்மை பணியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
-
நெல்லையில் ஐ.டி. ஊழியர் கொலையில் ஒருவர் கைது
13 Aug 2025தூத்துக்குடி, நெல்லையில் ஐ.டி. ஊழியர் கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
-
உயிரிழந்ததாக கூறிய பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் ராகுல் சந்திப்பு
13 Aug 2025புதுடெல்லி, உயிரிழந்ததாக கூறிய பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
-
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்: வரிவிதிப்பு விவகாரத்தில் டிரம்ப்பை சந்திக்கிறார்
13 Aug 2025புதுடெல்லி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன.
-
கொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
13 Aug 2025புதுடெல்லி : மல்யுத்த வீரர் சாகர் ரானா கொலை வழக்கில் சக மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்துள்ளது.
-
சென்னையில் மேலும் 2 புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்க ஆலோசனை
13 Aug 2025சென்னை : சென்னையில் புதிதாக மேலும் 2 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.
-
வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார் அமித்ஷா
13 Aug 2025புதுடெல்லி : நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்
-
தெருநாய்கள் தொடர்பான உத்தரவு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
13 Aug 2025டெல்லி : தெருநாய்கள் தொடர்பான உத்தரவு தொடர்பான வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
-
தமிழ்நாட்டில் வாக்காளர் திருத்தம் நியாயமாக நடைபெற வேண்டும்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
13 Aug 2025சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க.
-
தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்: அரசுக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு
13 Aug 2025சென்னை, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
-
பேச்சுவார்த்தையில் தூய்மை பணியாளர்கள் வைத்த கோரிக்கைகள்: மேயர் பிரியா பேட்டி
13 Aug 2025சென்னை, அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தூய்மை பணியாளர்கள் வைத்த கோரிக்கைகள் குறித்து மேயர் பிரியா விளக்கம்.
-
கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து: தி.மு.க. கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
13 Aug 2025சென்னை, நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.ல்.ஏ.க்களுக்கு மாநில கவர்னர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
-
கூலி திரைப்படம் வெற்றிபெற ரஜினிக்கு இ.பி.எஸ். வாழ்த்து
13 Aug 2025சென்னை, கூலி திரைப்படம் வெற்றி பெற நடிகர் ரஜினி காந்த்துக்கு இ.பி.எஸ் வாழ்த்து தெரிவித்தார்.
-
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் மைத்ரேயன்
13 Aug 2025சென்னை, அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
14 Aug 2025சென்னை : சுதந்திர நாள் விழா முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
ஜார்க்கண்ட்: மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
13 Aug 2025ஜார்க்கண்ட் : ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிறை செல்வேன்: கர்நாடக எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
13 Aug 2025பெங்களூரு, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 2,800 நாய்களை கொன்று புதைத்துள்ளேன் அதற்காகவும் நான் சிறைக்கு செல்லவும் நான் தயார் என்று கர்நாடக எம்.எல்.ஏ.
-
சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
14 Aug 2025சென்னை : சுதந்திர நாள் விழா முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்
14 Aug 2025சென்னை : சுதந்திர நாள் விழா முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை அமைக்கப்படும் : பார்லி.யில் மத்திய அரசு தகவல்
13 Aug 2025டெல்லி : நடப்பு நிதியாண்டில் 10, 660 கி.மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
நியூஸிலாந்தில் நிலநடுக்கம்
13 Aug 2025வெல்லிங்டன் : நியூசிலாந்தின் லோயர் நார்த் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சற்றே குறைந்த தங்கம் விலை
13 Aug 2025சென்னை, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 6-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது.
-
ஆபரேசன் சிந்தூரின் போது பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தப்பட்டதா..? அமெரிக்கா பதில் அளிக்க மறுப்பு
13 Aug 2025ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்ற கேள்விக்கு அமெரிக்க பதில் அளிக்க மறுத்து விட்டது.
-
துணைவேந்தர்கள் தேர்வு விவகாரம்: கவர்னருக்கு அதிகாரம் இல்லை: சுப்ரீம் கோர்ட்
13 Aug 2025புதுடெல்லி, கேரள பல்கலைக்கழகங்களில் இடைக்கால துணைவேந்தர்களை நியமித்த கவர்னரின் முடிவுக்கு எதிராக அம்மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
-
எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் இணையும்: இ.பி.எஸ். நம்பிக்கை
13 Aug 2025திருப்பத்தூர், மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும் என முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.