முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டன் பிரபாகரன் திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2025      சினிமா
Captain-Prabhakaran 2025-08

Source: provided

விஜயகாந்தின் 100 வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’  34 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். இப்படம் இப்போது  டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மீண்டும் வெளியாகியிருக்கிறது. வீரப்பனின் முகம் வெளியுலகிற்கு தெரியாத அந்த கால கட்டத்தில், வீரப்பன் யார்?, அவன் இப்படி ஒரு குற்றவாளியாக உருவெடுக்க காரணமானவர்கள் யார் யார்? என்பதை மையக்கருவாக கொண்டு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்  ஆர்.கே.செல்வமணி, ஆக்‌ஷன் வசன உச்சரிப்பு என படம் முழுவதும் தனது ஆளுமையை நிலைநாட்டியிருக்கும் விஜயகாந்த், படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. வில்லன் மன்சூர் அலிகானின் காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், ரூபினி உள்ளிட்ட பலர் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.  இளையராஜா இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். லியாகத் அலிகானின் வசனம் வீரமாக உயர்ந்திருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் ஆர்.கே.செல்வமணி 34 வருடங்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை கொடுத்தது போலவே இப்போதும் கொடுத்து இருக்கிறார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து