எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் வளர்ச்சியில், மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் வாழ்வதும், வளர்வதும் தமிழும் தமிழ் இனமுமாய் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெர்மனியின் கொலோன் நகரில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு - ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் பேசிய அவர், “ பல்லாயிரம் கிலோ மீட்டர்களைக் கடந்து, வேறொரு நாட்டில் நீங்களும், நானும் சந்திக்கின்றபோது ஏற்படுகின்ற இந்த மகிழ்ச்சிதான், உண்மையான தமிழ்ப் பாசம். தமிழினப் பாசம் இது.
"உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும், தமிழன் இருப்பான. தமிழ்க் குரலைக் கேட்கலாம்" என்று சொல்கின்ற அளவுக்கு உலகெல்லாம் பரவி, தங்களுடைய அறிவால், உழைப்பால் உயர்ந்திருக்கின்ற இனம்தான், நம்முடைய தமிழினம். நம்முடைய இனத்திற்கான இதுதான் மிகப் பெரிய பெருமையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஜெர்மனி நாட்டில் உங்கள் எல்லோரையும், அதுவும் உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்கின்றபோது மகிழ்ச்சி. நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்புமிக்க பொசிஷனில் இருப்பதை பார்க்கும்போது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக, திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவனாக மிகந்த மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமை அடைகிறேன்.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் வளர்ச்சியில், மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய தமிழ்நாட்டு வளர்ச்சியைப் பற்றி நீங்கள் எல்லாம் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள் - சோஷியல் மீடியாக்களில் பார்த்திருப்பீர்கள். இங்கு இருக்கக்கூடிய உறவினர்கள், நண்பர்கள் மூலமாக கேள்வியும் பட்டிருப்பீர்கள்.
இந்த வளர்ச்சியை இன்னும் இன்னும் விரைவுப்படுத்த வேண்டும் என்று தான் முதலீட்டாளர்கள் மாநாடு, அதாவது முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் ஆகியவற்றை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். யு.ஏ.இ., ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கெல்லாம் பயணத்தை மேற்கொண்டு ஏராளமான முதலீடுகளைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்து, நம்முடைய மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.
இப்படி வெளிநாடுகளுக்கு வரும்போது, முதலில் எனக்குள் என்ன தோன்றுகிறது என்றால், இந்த நாட்டில் வாழுகின்ற நம்முடைய தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுடைய வாழ்க்கைத்தரம் எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது? பெரும் பாடுபட்டு தலைநிமிர்ந்த இந்த இனம், இந்த மண்ணில் சுயமரியாதையுடன் நடைபோடுவதை பார்க்கவேண்டும் என்று நான் நினைப்பேன்.
அதிலும் முக்கியமாக, ஒரு அயலக மண்ணில், நம்முடைய தமிழைக் கேட்கவேண்டும் என்ற ஆசை எனக்கு வந்துவிடும். எல்லோருக்கும் அப்படிதான். அதனால்தான், ஜெர்மனிக்கு வந்தவுடனே முதலில் உங்களை சந்திப்பதற்கு வந்துவிட்டேன். இப்போது உங்களுடைய ஆரவாரத்தை கேட்கும்போது மகிழ்ச்சியை பார்க்கும்போது, நொடியில் தமிழ்நாட்டிற்கு டிராவல் செய்த உணர்வு ஏற்படுகிறது. மனிதன் எங்கே சென்றாலும், அவனுடைய வேர் இருக்கின்ற தாய்நிலத்தை மறக்க மாட்டான்.
அப்படித்தான் உங்களுடைய நினைப்பும், எப்போதும் தமிழ்நாட்டின் மீதே இருக்கும். தமிழ்நாட்டில் இருக்கின்ற நாங்களும் உங்களை அன்போடு பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் நம்முடைய திராவிட மாடல் அரசில், அயலகத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஆண்டு மட்டும், இந்த அயலகத் தமிழர் நாள் விழாவுக்கு எத்தனை நாடுகளில் இருந்து நம்முடைய தமிழர்கள் சென்னைக்கு வந்திருந்தார்கள் தெரியுமா? 62 நாடுகளிலிருந்து வந்தார்கள். சொந்த மண்ணில் கால் வைத்தபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்து அதை நான் ரசித்தேன் – புலங்காகிதம் அடைந்தேன் – பூரிப்படைந்தேன்.
அடுத்து, அயலகத் தமிழர் நலவாரியம். அயலகத் தமிழர்களுக்கான டோல்-ஃப்ரீ ஹெல்ப்லைன், அதேபோன்று புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு சுழல் நிதி, தமிழ்நாட்டுக்கு வெளியே வாழுகின்ற தமிழர்களுக்கு இன்ஷுரன்ஸ் என்று ஏராளமான திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று, எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிடுகிறவர்களின் குடும்பத்திற்கு, நிதியுதவியும், பென்ஷனும் வழங்குகிறோம்.
இப்படி பார்த்து பார்த்து செய்து தருவதுடன், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடோடி வந்து உதவுகிறோம். இதற்கு சில எடுத்துக்காட்டுகளை நான் சொல்ல விரும்புகிறேன். உக்ரைன் நாட்டில் இருந்து ஆயிரத்து 524 மாணவர்கள், சூடானில் இருந்து 253 பேர், இஸ்ரேலில் இருந்து 126 பேர், வங்கதேசத்தில் இருந்து 220 பேர், கம்போடியா - தாய்லாந்து - மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து 119 பேரை மீட்டு வந்திருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, இன்னும் சில நெகிழ்ச்சியான சம்பவங்களையும் உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். காஞ்சிபுரத்தை சேர்ந்த மனோஜ் என்பவர், அமெரிக்காவில் இருந்து சென்னை வரும்போது, அவருடைய குழந்தை சந்தியாவுக்கு நடுவானில் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே விமானத்தை, இஸ்தான்புல்லில் தரையிறக்கினார்கள். அந்தக் குழந்தையை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துக் கொண்டு வர 10 இலட்சம் ரூபாய் வழங்கினோம்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த முபாரக் அலி என்பவருக்கு தாய்லாந்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது 10 லட்சம் ரூபாய் செலவில், சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்து சிகிச்சை அளித்தோம். குவைத் தீ விபத்தில் சிக்கிய 7 தமிழர்களுடைய உடலை மீட்டு ஒப்படைத்து, அந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினோம்.
இரண்டாம் உலகப் போரில் போர் கைதிகளாக இருந்து மறைந்த தமிழர் நினைவாக, தாய்லாந்தில் நடுகல் அமைக்க 10 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறோம். இதையெல்லாம் நான் குறிப்பிட்டு சொல்லக் காரணம்,
இப்போது நான் சொன்ன முன்னெடுப்புகள் எல்லாவற்றையும்விட, மிக முக்கியமான திட்டம்தான், வேர்களைத் தேடித் திட்டம். வெளிநாடுகளிலேயே செட்டில் ஆகிவிட்ட சிலர், “மண்ணை விட்டு பிரிந்து தூர தேசத்துக்கு வந்துவிட்டோமே, இனி இந்த சொந்தம் அவ்வளவுதானா” என்று உங்களுக்குள்ளே நிச்சயம் இது ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்களுடைய குழந்தைகளை, மாணவர்களை நம்முடைய தமிழ்நாட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்று, நம்முடைய மரபின் வேர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறோம்.
2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில், இதுவரைக்கும் 15 நாடுகளிலிருந்து 292 பேர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். பலர், சில தலைமுறைகளாக விட்டுப் போன சொந்தங்களை தேடிக் கண்டுபிடித்து உருகியிருக்கிறார்கள். அவர்கள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரும், அவர்கள் மனதில் தேங்கி நின்ற பாசமும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்று நான் நினைக்கிறேன்.
“வாழ்வதும், வளர்வதும் தமிழும் தமிழினமுமாய் இருக்க வேண்டும்” இதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசின் குறிக்கோள். இதற்காகத்தான் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-09-2025.
03 Sep 2025 -
நாளை நடக்கும் கூட்டத்துக்கு வருமாறு கட்சி நிர்வாகிகள் யாரையும் நான் அழைக்கவில்லை: செங்கோட்டையன்
03 Sep 2025ஈரோடு : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
-
சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தவே கச்சத்தீவில் ஆய்வு: இலங்கை அரசு
03 Sep 2025கொழும்பு : கச்சத்தீவுக்கு விரைவில் சுற்றுலா திட்டம் கொண்டு வருவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது, என இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்
-
தொழில்நுட்ப தேர்வில் 2 கேள்விகளில் மொழி பெயர்ப்பில் நடந்த தவறு குறித்து டி.என்.பி.எஸ்.சி. ஆலோசனை
03 Sep 2025சென்னை : தொழில்நுட்ப தேர்வில் 2 கேள்விகளில் மொழிபெயர்ப்பில் நடந்த தவறு குறித்து டி.என்.பி.எஸ்.சி. ஆலோசனை நடத்தி வருகிறது.
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரணம் : ராகுல் காந்தி வலியுறுத்தல்
03 Sep 2025புதுடெல்லி : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தினார்.
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஜெய்சங்கர் நம்பிக்கை
03 Sep 2025புதுடெல்லி : ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும் என்பதை இந்தியா விரும்புகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜ
-
பணிச்சுமை காரணத்தால் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்
03 Sep 2025திண்டுக்கல் : பணிச்சுமை காரணத்தால் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
நடிகர் சவுபின் வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு
03 Sep 2025சென்னை : நடிகர் சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
-
தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
03 Sep 2025சென்னை : தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து வருகிற 9-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
இந்தியா மீதான இறக்குமதி வரி விதிப்பு மறுபரிசீலனையா? - அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
03 Sep 2025வாஷிங்டன் : இந்தியப் பொருட்களுக்கான 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா மறுபரிசீலனை செய்து வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், “நாங்கள்
-
சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை - சுகாதாரத்துறை விளக்கம்
03 Sep 2025சென்னை : சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
-
விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? - பசுமை தீர்ப்பாயம் கேள்வி
03 Sep 2025சென்னை : விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? என சென்னை மாநகராட்சிக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பணிகளுக்கு ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு
03 Sep 2025சென்னை, விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் பணிக்கு தமிழ்நாடு அரசு ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
-
அன்புமணி மீது நடவடிக்கை இல்லை; விளக்கம் அளிக்க காலக்கெடு நீடிப்பு
03 Sep 2025விழுப்புரம் : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது.
-
விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்
03 Sep 2025விருதுநகர் : விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.
-
இந்திய அணிக்கு திரும்புவது குறித்து புவனேஷ்வர் குமார்
03 Sep 2025மும்பை : இந்திய அணியில் இருந்து ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய அணிக்கு திரும்புவது தேர்வாளர்கள் கையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து நக்சல்களும் சரணடையும் வரை மோடி அரசு ஓயாது: அமித்ஷா
03 Sep 2025புதுடெல்லி : நக்சலைட்டுகள் அனைவரும் சரணடையும் வரையோ, பிடிபடும் வரையோ, கொல்லப்படும் வரையோ மோடி அரசு ஓயாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
அமைதி - போர் 2-ல் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உலகம் : சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு
03 Sep 2025பெய்ஜிங் : அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு வெற்றி விழா ராணுவ அ
-
புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தங்களை செப். 22-க்குள் அமல்படுத்த மத்திய அரசு புதிய திட்டம்: 175 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைய வாய்ப்பு
03 Sep 2025புதுடெல்லி, புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தங்களை 22-ம் தேதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால் 175 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.
-
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க திட்டம்
03 Sep 2025சென்னை : தமிழ்நாட்டின் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு கோடை காலத்தின் போதும் மின்சார தேவை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
-
பா.ஜ.க. உட்கட்சி பூசல்களை தவிர்க்க நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை
03 Sep 2025புதுடெல்லி : பா.ஜ.க. உட்கட்சி பூசல்களைதவிர்க்க நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை வழங்கினார்.
-
ஜெர்மனி பயணத்தை நிறைவு செய்து இங்கிலாந்து சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
03 Sep 2025இங்கிலாந்து சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அயலக தமிழர்கள் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
-
ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாள்: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்
03 Sep 2025மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பேச்சியம்மன் படித்துறை அருகிலுள்ள புட்டுத்தோப்பு மண
-
பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து முதல் முறையாக மனம் திறந்தார் விராட் கோலி : சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள், துக்கமாக மாறியது
03 Sep 2025மும்பை : பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் விராட் கோலி.
-
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தொடர்பான வழக்கு: தமிழ்நாடு டி.ஜி.பி. பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 Sep 2025மதுரை : தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கலான மனுவுக்கு டி.ஜி.பி. பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.