முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. அரசின் தடைகளைக் கடந்து 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2025      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, பா.ஜ.க. அரசின் தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம் என தெரிவித்துள்ள முதல்வர்மு.க.ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது., சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், நமது திராவிட மாடல் அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதைத் தக்க தரவுகளோடுஅமைச்சர்கள் தங்கம் தென்னரசு , சிவ சங்கர், கோவி செழியன் ஆகியோர் விளக்கியுள்ளனர்.

இன்னும் ஒருபடி மேலே சொன்னால், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண்,தமிழ்ப்புதல்வன் போன்ற இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்படுத்தப்படும் முத்திரைத் திட்டங்கள் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்படாதவை. முந்தைய ஆட்சியின் பத்தாண்டுகால நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத ஒன்றிய பா.ஜ.க. வன்ம அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம். என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து