முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெருநாய்கள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் எம்.பி. பதில்

புதன்கிழமை, 3 செப்டம்பர் 2025      தமிழகம்
Kamal 2024-01-12

Source: provided

சென்னை : கழுதைகள் எங்கே என்று யாராவது கவலைப்படுகிறார்களா? நமக்காக அது எவ்வளவு பொதி சுமந்திருக்கிறது? என்று நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம் தெருநாய்கள் பிரச்சினை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதற்கான தீர்வு மிகவும் சிம்பிள். உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்னவென்று தெரிந்தவர்கள் கழுதைகள் எங்கே என்று கவலைப்படுகிறார்களா? நமக்காக அது எவ்வளவு பொதி சுமந்திருக்கிறது? ஆனால் இப்போது கழுதைகளையே காணவில்லை. அதை யாராவது காப்பாற்றவேண்டும் என்று பேசினார்களா? எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். எவ்வளவு முடியுமோ காப்பாற்ற வேண்டும்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் தெருநாய்க்கடி பிரச்சினை பெரியளவில் தலைதூக்கியுள்ளது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் நாய்க்கடி தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அண்மையில் தனியார் தொலைகாட்சி ஒன்றில் தெருநாய்கள் பிரச்சினை தொடர்பாக நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், கமல்ஹாசன் இவ்விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து