முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி எனக்கு திருப்புமுனை அமையும்: த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2025      தமிழகம்      அரசியல்
Vijay-2-2025-09-13

திருச்சி, திருச்சி திருப்புமுனையாக அமையும் என்று  திருச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பேசினார்.

திருச்சியில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் விஜய் வேனில் இருந்தபடியே பேசியது:-

அந்த காலத்துல, போருக்கு போறத்துக்கு முன்னாடி, போர்ல ஜெயிக்குறதுக்காக குலதெய்வ கோயிலுக்கு போய் சாமியை கும்பிட்டுதான் போவாங்கலாம். அந்த மாதிரி தேர்தலுக்கு போறதுக்கு முன்னாடி நம்ம மக்களை பார்த்துட்டு போலாம்னு வந்திருக்கேன்.ஒரு சில மண்ணை தொட்டா ரொம்ப நல்லது. ஒரு சில நல்ல காரியங்களை இந்த இடத்துல இருந்து தொடங்குனா நல்லதுனு பெரியவங்க சொல்லுவாங்க இல்லையா? அது மாதிரி திருச்சில தொடங்குனா திருப்பு முனையா அமையும். அதுக்கு உதாரணமா அண்ணா 1956ல தேர்தல்ல நிக்கனும்னு நினைச்சது திருச்சிலதான். எம்ஜிஆர் 1974ல முதல் மாநாடு நடத்துனது திருச்சிதான்.அது மாதிரி திருச்சிக்கு நிறைய வரலாறு இருக்கு. பெரியார் வாழ்ந்த இடம். மலைக்கோட்டை இருக்கும் இடம். மதசார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பெயர் போன இடம். கொள்கை உள்ள மண் இது. அது மட்டுமில்லாம, உங்களை பார்க்கும்போது மனசுக்குள்ள ஒரு பரவசம், ஒரு எமோஷன்.

2021 சட்டமன்றத் தேர்தல்ல தி.மு.க. 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துச்சி. அதுல எத்தனை விஷயங்களை நிறைவேற்றி யிருக்காங்க? டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாதாந்திர மின்சாரக் கட்டணம் கணக்கீடு, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு, பழைய ஓய்வூதிய திட்டம், 2 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்புவது. இவை எல்லாம் என்ன ஆனது?நம்ம கேள்வி கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான். தி.மு.க.வினரிடமிருந்து எந்தப் பதிலும் வரப்போவதில்லை. திருச்சி மக்களுடைய சத்தம் கேட்கிறதா முதல்வர் அவர்களே? தி.மு.க.-வைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ‘ஓசி ஓசி’ எனச் சொல்லிக்காட்டுகிறார்கள். அனைத்து மகளிருக்கும் 1,000 தருவதில்லை. ஆனால், கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.

ஆனால், கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை த.வெ.க செய்துகொடுக்கும். பெண்கள் பாதுகாப்பிலும் சட்டப் பிரச்னைகளிலும்  எந்த சமரசமும் இல்லை. . நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி, வணக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து