முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2025      இந்தியா
GST 2023-03-01

புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.

வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. இதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது. இந்த புதிய விகிதம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

விலை உயரும் பொருட்கள்

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய உள்ளது. அதேபோல சில பொருட்களின் விலை கூட இருக்கிறது. குறிப்பாக ஆடம்பர பொருட்களின் விலை கூட உள்ளது. சிகரெட், பான் மசாலா, குட்கா, மெல்லும் புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவை கடுமையாக உயர உள்ளது. ஏனெனில் இவற்றுக்கான வரி 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, குளிர்பானங்கள், 350 சிசி திறனுக்கு மேலே உள்ள பைக்குகள் (ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அல்லது 650 சிசி சீரிஸ் பைக்குகள்) விலை அதிகரிக்க உள்ளது.சொகுசு கார்கள், இறக்குமதி செய்யப்படும் எஸ்.யூ.வி கார்கள் ஆகியவையும் விலை கூட உள்ளது.

விலை குறையும் பொருட்கள்

சாக்லேட்டுகள், பாஸ்தா, ரெடிமேட் நூடுல்ஸ், பன்னீர், நெய், வெண்ணெய், உலர் பழங்கள், நொறுக்குத் தீனி உள்ளிட்டவைகளின் விலை குறைய உள்ளது. மக்களின் வீட்டு உபயோகப் பொருட்களான ஏ.சி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், 32 இன்ச்-க்கு மேல் உள்ள டி.விகள், டிஷ் வாஷர் ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீத வரிக்குள் வந்து விட்டது. இதனால் இந்தப் பொருட்களின் சராசரி விலையில் இருந்து 10 சதவீதம் குறைகிறது.

 

உதாரணமாக ரூ.40 ஆயிரம் விற்கப்பட்ட ஏ.சி., இப்போது ரூ.4 ஆயிரம் குறைந்து ரூ.36 ஆயிரமாகி இருக்கிறது. ஆடம்பர கார்களைத் தவிர 1,200 சிசி-க்கும் குறைவாக உள்ள கார்கள் அனைத்தும் விலை குறைக்கப்பட்டுள்ளன. அதன் வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், அதன் விலைக்கு ஏற்ப விலை குறைவு இருக்கிறது. அதாவது ரூ.65 ஆயிரம் முதல் ரூ.3½ லட்சம் வரை கார் விலை குறைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து