முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினேஷ் கார்த்திக் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2025      விளையாட்டு
Dinesh-Karthik 2025-06-17

Source: provided

ஹாங் காங் சிக்ஸ் தொடரில் இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவின் ஹாங்காங்கில் நடைபெறும் ஹாங்காங் சிக்ஸஸ் தொடர் வருகிற நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகள் டின் குவாங் சாலை பொழுதுபோக்கு திடலில் நடைபெறவுள்ளன. மிகக் குறுகிய காலமே நடைபெறக்கூடிய இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக முன்னாள் இந்திய வீரரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹாங்காங் சிக்ஸர் என்பது கிரிக்கெட் அணியில் 11 பேருக்கு பதிலாக 6-பேர் கொண்ட அணியாக விளையாடுவர். இந்தத் தொடர் 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பை வென்றிருந்தது. கடந்த முறை நடைபெற்ற தொடரில் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, ஹாங்காங், நேபாளம், நியூசிலாந்து, ஓமன், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகள் விளையாடின. 

_____________________________________________________________________________________________________

சென்னையில் தடகள போட்டி

இந்திய மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம் சார்பில் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி நவம்பர் 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. 35 வயதுக்கும் மேற்பட்டவருக்கான இந்த போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,000 பேர் பங்கேற்கிறார்கள்.

இந்தோனேசியாவில் முதலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த போட்டி பிறகு இந்தியாவுக்கு மாற்றப்பட்டது. நவீன விளையாட்டு வசதிகள் மற்றும் தமிழக அரசின் உறுதியான ஆதரவுடன் சென்னையில் இந்த போட்டி நடக்கிறது. 3-வது முறையாக இந்தியா இப்போட்டியை நடத்துகிறது. நடிகர் ஆர்யா இந்த போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். மேற்கண்ட தகவலை இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் பொதுச்செயலாளர் டேவிட் பிரேம்நாத் , துணைத் தலைவர் எம்.சென்பகமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

_____________________________________________________________________________________________________

அர்ஷ்தீப் சிங்கின் பதிலடி 

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் துபாயில் கடந்த 21-ந் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்லிடம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் வம்பிழுத்தார். அதற்கு இருவரும் தக்க பதிலடி கொடுத்தனர். அத்துடன் இதனை பார்த்த இந்திய ரசிகர்களும் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்த ஹாரிஸ் ராஃப்புக்கு எதிராக கோலி.. கோலி.. என கூச்சலிட்டு கலாய்த்தனர். அதற்கு ஹாரிஸ் ரவூப் 6 விரல்களைக் காட்டி 'விமானம் விழுந்து நொறுங்குவது' போன்ற சைகையை செய்தார். அதாவது காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடியாக, "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே நாள் இரவில் மொத்தம் 9 தீவிரவாத முகாம்கள் இதில் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது ஆறு இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பலமுறை கூறியது. அந்த போலியான செய்தியை வைத்துக்கொண்டு '6 விமானங்கள் வீழ்த்தப்பட்டது மறந்து விட்டதா?' என்ற வகையில் ஹாரிஸ் ராஃப் சைகை செய்தார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கோலி.. கோலி.. என்று கூச்சலிட்டு அவருக்கு மீண்டும் பதிலடி கொடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஹாரிஸ் ராஃப் சைகைக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவரது சைகை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

_____________________________________________________________________________________________________

சமபலத்துடன் உள்ளோம்: அலிஸா

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது. இந்த நிலையில், இளம் மற்றும் மூத்த வீராங்கனைகள் என ஆஸ்திரேலிய அணி சமபலத்துடன் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் அலிஸா ஹீலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணி சமபலத்துடன் வலுவாக உள்ளது. அணியில் இளம் மற்றும் மூத்த வீராங்கனைகள் இருக்கிறார்கள். சிலர் முதல் முறையாக உலகக் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ளார்கள். ஒரு அணியாக சிறப்பான இடத்தில் இருப்பதாக நினைக்கிறேன். வீராங்கனைகள் போட்டிகளின்போதும், போட்டி நிறைவடைந்த பிறகும் அதிக நேரம் செலவிடுகிறார்கள். உலகக் கோப்பைத் தொடரில் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே எங்களது அணி நல்ல நிலையில் உள்ளது என்றார்.

_____________________________________________________________________________________________________

வங்கதேச பயிற்சியாளர் நம்பிக்கை

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்று நிறைவடைந்து அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடி வருகின்றன. இந்த நிலையில், இந்திய அணி கடந்த நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது பெரிய விஷயமில்லை எனவும், எந்த ஒரு அணியாலும் இந்தியாவை வீழ்த்த முடியும் எனவும் வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: எந்த ஒரு அணிக்கும் இந்திய அணியை வீழ்த்தக் கூடிய திறன் இருக்கிறது. 

போட்டி நாளில் என்ன நடக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியம். இந்திய அணி கடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது என்பதெல்லாம் முக்கியமல்ல. போட்டி நடைபெறும் மூன்றரை மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் முக்கியம். எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வீழ்த்த முயற்சிப்போம். உலகின் சிறந்த டி20 அணியான இந்தியாவுக்கு எதிரான போட்டி என்றால், எப்போதும் அதிக அளவிலான எதிர்பார்ப்பு இருக்கும். இந்தியாவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான போட்டியை நாங்கள் உற்சாகமாக விளையாடவுள்ளோம் என்றார்.

_____________________________________________________________________________________________________

டெம்பலேவுக்கு மெஸ்சி வாழ்த்து

கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 (30 ஆண் மற்றும் 30 பெண்) பேர் இடம் பெற்றிருந்தனர்.. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை 28 வயதான பிரான்ஸ் வீரர் டெம்பலே வென்றார். கிளப் போட்டிகளில் பிஎஸ்ஜி அணிக்காக 2024-25 சீசனில் சிறந்த ஆட்டத்தை டெம்பலே வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் பலோன் டி'ஓர் விருதை வென்ற டெம்பலேவுக்கு, கால்பந்து ஜாம்பவானும், அதிக முறை(8) பலோன் டி'ஓர் விருதை வென்றவருமான மெஸ்சி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மெஸ்சி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், அருமை வாழ்த்துகள் டெம்பலே. உங்களுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இந்த விருதுக்கு தகுதியானவர். என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து