முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான உணவில் கிடந்த முடி: பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2025      தமிழகம்
Air-India

சென்னை, விமான உணவில் முடி இருந்ததை முன்னிட்டு பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் இருந்து கடந்த சில மாதங்களுக்குமுன் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் சென்னைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த பயணிக்கு விமானத்தில் உணவு வழங்கப்பட்டது. அந்த உணவில் தலைமுடி இருந்துள்ளது.

இதுகுறித்து விமான ஊழியர்களிடம் அந்த பயணி முறையிட்டுள்ளார். ஆனால், அந்த பயணிக்கு விமான பணியாளர்கள் வேறு உணவு வழங்கவில்லை. இதையடுத்து, சென்னை தரையிறங்கிய உடன் அந்த பயணி ஏர் இந்தியா விமான நிறுவனம் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தலைமுடி விழுந்த உணவை சாப்பிட்டு தனக்கு வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நல பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தனக்கு ரூ. 11 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் கோர்ட்டு, பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து ஏர் இந்தியா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பயணிக்கு முடிவிழுந்த உணவை வழங்கி, பாதிப்பை ஏற்படுத்தியதற்கான பொறுப்பை ஏர் இந்தியா நிறுவனம் உணவு வழங்கும் ஓட்டல் நிறுவனத்திற்கு மாற்ற முயற்சிக்கிறது. இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம்தான் பொறுப்பு என்று கோர்ட்டு கூறியது. மேலும், மனு தாரரான பயணிக்கு ஏர் இந்தியா நிறுவனம் 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட்டு முடித்து வைத்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து