முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பைசன் திரை விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2025      சினிமா
Bison-Review 2025-10-19

Source: provided

சர்வதேச கபடி போட்டியில் களம் கண்ட ஒரு சாதாரான கபடி வீரரின் வலி மிகுந்த கடந்து வந்த பாதைதான் பைசன் படக் கதை. தடைகளை உடைத்து முன்னேறும் ஒரு விளையாட்டு வீரரின் வலி மிகுந்த வெற்றி பயணத்தை, தனது மண் மற்றும் மக்களின் வாழ்வியல் பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். நாயகன் துருவ் விக்ரம், கபடி வீரனாக களத்தில் நிற்கும் காட்சிகள் அனைத்தும் சபாஷ் போட வைக்கிறது. பள்ளிப் பருவத்திலும், கபடி வீரராக களம் காணும் போதும் தோற்றத்தில் சிறப்பான வேறுபாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். துருவ் விக்ரமின் தந்தையாக நடித்திருக்கும் பசுபதி, கண்களின் மூலமாகவே பலவித உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அருவி மதன், இயக்குநர் அமீர், லால் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின் பாடல்களும் பின்னணி இசையும் உயிர்ப்பாக உள்ளது. எழுதி இயக்கியிருக்கும் மாரி செல்வராஜ், தனது தனித்துவமான கதை சொல்லல் மூலம் படம் முழுவதும் வியக்க வைக்கிறார். இங்கு அனைவரும் சமம் என்பதற்காக ஒரு போராட்டமும், காரணமே தெரியாத ஏற்றத் தாழ்வு போராட்டமும், எப்போதோ தோன்றி விட்டது இதனை மாற்ற வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். மொத்தத்தில், ‘பைசன்’ மிரட்டல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து