முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே மாதத்தில் யு.பி.ஐ. பரிவர்த்தனையில் ரூ. 27.28 லட்சம் கோடி பண பரிமாற்றம்

திங்கட்கிழமை, 3 நவம்பர் 2025      இந்தியா
UPI-2025-06-17

Source: provided

புதுடெல்லி: ஒரே மாதத்தில் யு.பி.ஐ. பரிவர்த்தனையில் ரூ.27.28 லட்சம் கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

யு.பி.ஐ. பயன்பாடு மக்களிடயே அதிகரித்து வருகிறது. சிறிய பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் என அனைத்து இடங்களிலும் யுபிஐ மூலமாக தற்போது பணபரிமாற்றம் நடைபெறுகிறது. ஒரு ‘கிளிக்’ மூலமாகவே பணம் அனுப்பவும் பெறவும் உதவுவதால், இது இந்தியாவில் மிகவும் பிரபலமான பண பரிவர்த்தனை சேவையாக வளர்ந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் குறித்து தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த மாதத்தில் யு.பி.ஐ. மூலமாக மொத்தம் 2 ஆயிரத்து 70 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய செப்டம்பர் கணக்கை காட்டிலும் 3.6 சதவீதம் அதிகமாகும்.

இந்த பரிவர்த்தனைகள் மூலமாக ரூ.27.28 லட்சம் கோடி பண பரிமாற்றம் நடந்தது. இது இதுவரை இல்லாத சாதனை ஆகும். இது அதற்கு முந்தைய மாதத்தை காட்டிலும் 9.5 சதவீதம் அதிகமாகும். தினமும் சராசரியாக 66.8 கோடி பரிவர்த்தனைகள் யு.பி.ஐ. மூலமாக மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஜி.எஸ்.டி. வரியில் சீர்திருத்தம் மற்றும் பண்டிகை கால எதிரொலி காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து