முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு சம்பவம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      இந்தியா
Pak 2025-11-11

Source: provided

புதுடெல்லி : இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்திய ஆதரவுக்குழு தான் என்று பாகிஸ்தான் குற்றச்சாட்டியுள்ள நிலையில், கட்டுக் கதைகளை சுமத்துவது பாகிஸ்தானின் தந்திரம் என்று இந்திய வெளியுறவத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் கோர்ட்டு வளாகம் அருகே ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் அந்த கார் வெடித்து சிதறியது. இதனையடுத்து மீட்பு படையினர் அங்கு சென்று பார்த்தபோது 12 பேர் உடல் சிதறி பலியாகி கிடந்தனர். படுகாயம் அடைந்த 20 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்திய ஆதரவுக் குழுதான் என குற்றம்சாட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றது, ஆதாரமற்றது. உள்நாட்டுப் பிரச்சினைகளில் இருந்து தனது சொந்த மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, இந்தியாவுக்கு எதிராக தவறான கட்டுக் கதைகளை சுமத்துவதே பாகிஸ்தானின் தந்திரம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து