முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக்கிய மசோதாவில் கையெழுத்திடார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்..! 43 நாட்கள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2025      இந்தியா
Trump

Source: provided

வாஷிங்டன்: மசோதாவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிலையில் அமெரிக்காவில் 43 நாட்கள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்க அரசு கட்டமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் அளும்கட்சி அந்த ஆண்டுகான நிதி செலவின திட்டத்தை தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். அப்படி பெறாவிட்டால் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் முதல் கான்டிராக்ட்-க்கான நிதி ஒதுக்கீடு, அரசு சேவைகள் வரையில் அனைத்தும் பாதிக்கும். இப்படி இந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி அறிக்கையை சமர்ப்பிக்கும் போது, ட்ரம்ப் அரசு சுதாகார திட்டத்திற்கான மானியத்தை தொடர முடியாது என அறிவித்த காரணத்தால் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியினர் எதிர்த்தனர். இதனால் மொத்த செலவின மசோதாவும் ஒப்புதல் பெற முடியாமல் அமெரிக்க அரசு முடக்கத்தை எதிர்கொண்டது.

நிதி முடக்கம் ஏற்பட்டதால், பல துறைகள், சேவைகள் முடங்கின. பல அரசு ஊழியர்கள் சம்பளமில்லாமல் விடுமுறையில் அனுப்பப்பட்டனர். நிதி இல்லாததுடன், ஊழியர் பற்றாக்குறையும் சேர்ந்ததால் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், தங்களின் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், ஜனநாயக கட்சியினரின் சிலர் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மசோதா செனட் சபையில் நிறைவேறியுள்ளது. அடுத்ததாக, பிரதிநிதிகள் சபையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ட்ரம்ப் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். 

இதனை தொடர்ந்து 43 நாட்களுக்கு அரசு நிர்வாகம் முடக்கம் முடிவுக்கு வந்தது. மசோதாவில் கையெழுத்திட்ட பிறகு ட்ரம்ப் கூறியதாவது: சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்காக நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைப் பறிக்கும் முயற்சியில், உள்ள ஜனநாயகக் கட்சியினர் கடந்த 43 நாட்களாக, அமெரிக்க அரசாங்கத்தை முடக்கினர். நேற்று, மிரட்டி பணம் பறிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்றார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்கா பிற நாடுகள் மீது வர்த்தக தடைகள், வரி விதித்து வரும் இதே வேளையில் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு தேவையான நிதி செலவின திட்டத்தை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற முடியாமல் கடந்த 40 நாட்களாக முடக்கத்தை எதிர்கொண்டது அமெரிக்கா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து