எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாட்னா : 10-வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் 19-ம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
243 உறுப்பினா்களை கொண்ட பீகாா் சட்டசபைக்கு நடைபெற்ற தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்த கூட்டணியில் 89 இடங்களுடன் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு 85 தொகுதிகளும், லோக் ஜனசக்திக்கு (ராம் விலாஸ் பஸ்வான்) 19 இடங்களும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 5 தொகுதிகளும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவுக்கு 4 இடங்களும் கிடைத்தன.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளின் 'இந்தியா' கூட்ட ணிக்கு பலத்த அடி விழுந்தது. இந்த கூட்டணியால் 34 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. ராஷ்டிரிய ஜனதாதளம் 25, காங்கிரஸ்-6, மார்க்சிஸ்டு லெனினிஸ்டு-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-1 இடங்களை கைப்பற்றின. தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களிலும் பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியிலும், ஐ.ஐ.பி. ஒரு இடத்தையும் பிடித்தன.
தேர்தலில் பா.ஜ.க.வைச் சோ்ந்த துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்திரி, விஜய் குமாா் சின்கா உள்பட மாநில அமைச்சர்கள் 25 போ் (பா.ஜ.க. 15, ஐக்கிய ஜனதா தளம் 10) மீண்டும் போட்டியிட்டனா். இவா்களில், ஐக்கிய ஜனதா தளத்தின் சுமித்குமாா் சிங் தவிர மற்ற அனைவரும் வெற்றி பெற்றனா்.
இதற்கிடையே பீகாரில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் டெல்லியிலும், பாட்னாவிலும் பேச்சுவார்த்தையை தொடங்கின. பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரை அவரது இல்லத்தில் சிராக் பஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். ஐக்கிய ஜனதா தள செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வராக்க பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சம்மதித்துள்ளன. இதுகுறித்து அமித்ஷா கூறும்போது, "பீகார் மக்கள் நல்ல ஆட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து இருக்கிறார்கள். மாநில மக்கள் நிதிஷ்குமார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளனர்" என்றார்.
புதிய ஆட்சி அமைப்பதற்கு ஏதுவாக நிதிஷ்குமார் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் பிறகு ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் நிதிஷ்குமார் முதல்வராக தேர்ந்து எடுக்கப்படுவார். அதை தொடர்ந்து புதிய ஆட்சி அமைக்க அவர் கவர்னரை சந்தித்து உரிமை கோருவார்.
நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்கும் விழா புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நடைபெறும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ஒருவர் தெரிவித்தார். 19-ம் தேதி சர்வ அமாவாசை (நல்ல நாள்) என்பதால் அன்றே அவர் பதவி ஏற்கலாம் என்று கூறப்படுகிறது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும்.
தற்போது அமைய இருக்கும் புதிய ஆட்சியில் கூட்டணியில் உள்ள மற்ற 3 கட்சிகளும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையில் இடம் பெறுவதில் ஆர்வத்துடன் இருப்பதாக லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் நிதிஷ்குமாரை சந்தித்த பிறகு தெரிவித்தார். கடந்த அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. மட்டுமே இடம் பெற்றன.
பா.ஜ.க.வில் 15 பேரும், ஐக்கிய ஜனதா தளத்தில் 12 பேரும், லோக் ஜனசக்தி கட்சியில் 6 பேரும், இந்துஸ் தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் சார்பில் ஒரு வரும் அமைச்சர்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகாரில் 10-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்கிறார்.
முதன்முதலில் அவர் 2000-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி முதல்வராக பதவியேற்றார். இந்த அரசு மெஜாரிட்டி நிரூபிக்க முடியாமல் அடுத்த 7 நாட்களில் கவிழ்ந்தது. ஓராண்டுக்கு பிறகு நடந்த தேர்தலில் ஆர்.ஜே.டி. கட்சி சார்பில் லல்லுவின் மனைவி ராப்ரி தேவி மீண்டும் முதல்வர் ஆனார். அதன்பிறகு 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று நிதிஷ்குமார் முதல்வர் ஆனார்.
கடந்த 2010-ம் ஆண்டு நிதிஷ்குமார் 3-வது முறை முதல்வர் ஆனார். கடைசி 2 ஆட்சியிலும் நிதிஷ்குமாருக்கு பா.ஜ.க. முழு ஆதரவு அளித்தது. பின்னர் 2014-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து நிதிஷ்குமார் பிரிந்தார். லல்லுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மெகா கூட்டணியில் இணைந்தவர் 2015-ம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்றார்.
இதில் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு அவர் மெகா கூட்டணியில் இருந்து பிரிந்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பினார். 2020-ம் ஆண்டு மறுபடியும் முதல்வராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022-ல் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி
ஆர்.ஜே.டி., காங்கிரசின் மெகா கூட்டணி சார்பில் முதல்வரானார். இதற்கிடையில் 2024-ம் ஆண்டு மே 24-ம் தேதி முதல் 278 நாட்கள் ஜே.டி.யு. ஆட்சியில் ஜிதன்ராம் மாஞ்சி இடைக்கால முதல்வராக இருந்தார். ஜனவரி 2024-ம் ஆண்டு நிதிஷ்குமார் மீண்டும் மெகா கூட்டணியை விட்டு வெளியேறி பா.ஜ.க.வுடன் இணைந்து 9-வது முறையாக முதல்வர் ஆனார். தற்போது 10-வது முறையாக முதல்வர் பொறுப்பேற்க உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1,843 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Mar 2026சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.03.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம்,
-
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி: பார்லி., மக்களவை ஒத்திவைப்பு
13 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
-
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
13 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
-
அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்
13 Mar 2026சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட 5 மாநில தோ்தல் தேதி மாா்ச் 16-ல் அறிவிப்பு?
13 Mar 2026புதுடெல்லி, தமிழகம், கேரளம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டப்பேரவை மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு மாா்ச் 15 அல்லது 16-ஆம் தேதி தோ்தல் தேதியை இந்திய தோ்த
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


