முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர்: போட்டி அட்டவணை அறிவிப்பு : முதல் ஆட்டத்தில் மும்பை - பெங்களூரு மோதல்

சனிக்கிழமை, 29 நவம்பர் 2025      விளையாட்டு
Woman 2024-11-19

Source: provided

மும்பை : 2026 - மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

277 வீராங்கனைகள்... 

4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பை மற்றும் வதோதராவில் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு வீராங்கனைகள் ஏலம் டெல்லியில் நடந்தது. ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்று இருந்தனர்.

ரூ.40.80 கோடிக்கு...

பிரபல ஏலதாரர் மல்லிகா சாகர் ஏலத்தை நடத்தினார். போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 5 அணிகளும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை குறி வைத்து ஏலம் கேட்டனர். மொத்தம் 67 வீராங்கனைகளை ரூ.40.80 கோடிக்கு அணிகள் வாங்கின.

நவிமும்பையில்...

இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. நவிமும்பையில் நடக்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இதன் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் (11) அனைத்தும் நவிமும்பையில் நடைபெற உள்ளன. இறுதிபோட்டி உட்பட எஞ்சிய போட்டிகள் அனைத்தும் வதோதராவில் நடைபெற உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து