முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகனுக்கு சேகர் என பெயர் சூட்டினார் எலான் மஸ்க்..!

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2025      உலகம்
Elon-Musk-2025-12-01

வாஷிங்டன், எனது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் தனது மகனுக்கு சேகர் என்று எலான் மஸ்க் பெயர் சூட்டியுள்ளார். 

உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மனைவி ஷிவான் சிலிஸ் மற்றும் குழந்தைகள் குறித்து பேசியுள்ளார். தனது மகனுக்கு நோபல் பரி பெற்ற இந்திய-அமெரிக்க விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகரின் நினைவாக சேகர் என பெயரிட்டுள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், “எனது மனைவி ஷிவான் சிலிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவருக்கும் எனக்கும் பிறந்த மகன்களில் ஒருவருக்கு, நோபல் பரிசு பெற்ற சந்திரசேகரின் நினைவாக சேகர் என்ற பெயரை சூட்டியுள்ளோம். எனது மனைவி ஷிவான், கைக்குழந்தையாக இருக்கும்போதே அவரை அவரது பெற்றோர்கள் தத்துக்கொடுத்துவிட்டனர். அவரது தந்தை பல்கலைக்கழகத்தில் படிக்க வந்த வெளிநாட்டு மாணவர் என்று நினைக்கிறேன். எனக்கு அதுபற்றி முழு விவரங்கள் தெரியாது. ஆனால் ஷிவான் குழந்தையாக இருக்கும்போதே தத்துக்கொடுக்கப்பட்டவர். அவர் கனடாவில் வளர்ந்தார்” என்று தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்-ஷிவான் சிலிஸ் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து