முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து மண்டலம்: இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      தமிழகம்
Rain-2023-11-30

Source: provided

சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ‘டித்வா' புயல், கடலோரப் பகுதிகள் வழியாக கடந்து சென்று மழையை கொடுத்து இருக்கிறது. இந்த புயல் உருவாவதற்கு முன்னதாகவே இது காற்று பாதிப்பை ஏற்படுத்தாமல், பரவலாக நல்ல மழையை கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இது நல்ல மழையை கொடுத்த புயலாகவே இருந்து இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 29-ந் தேதி தமிழகப் பகுதிகளுக்குள் நுழைந்து மழையை கொடுக்கத் தொடங்கியது. புயலின் மையப் பகுதிகளுக்குள் திடீரென நுழைந்த வறண்ட காற்று ஊடுருவலால், எதிர்பார்த்த மழை இல்லை என்றாலும், ஓரளவுக்கு மழையை கொடுக்கும் நிகழ்வாக இருந்தது.

ஆனால் வட மாவட்டங்களில் இந்த புயல் பெரிய ஏமாற்றத்தை கடந்த மாதம் 30-ந் தேதி கொடுத்தது. அதிகனமழை வரை பெய்யும் என கணிக்கப்பட்டு, வறண்ட காற்றின் ஊடுருவலால் அன்றைய தினம் மழை பொய்த்து போனது. இதன்படி டித்வா புயல் செயலற்ற நிலையில் சென்னைக்கு அருகே வலுவிழக்க தொடங்கியது. இதனையடுத்து டெல்டா, தென் மாவட்டங்களில் பெய்த மழைகூட வட மாவட்டங்களில், அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்யவில்லையே என பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இவர்களுக்கெல்லாம் பதில் கொடுக்கும் வகையில், வலுவிழந்து சென்னை கடலோரப் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தஞ்சம் அடைந்திருந்த டித்வா புயல், மேற்கத்திய தாழ்வுநிலையில் இருந்து அதாவது, இமயமலையில் இருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்றை ஈர்த்து வலுவான மேகக்கூட்டங்களை உருவாக்கத் தொடங்கியது. கடந்த 3 நாட்களுக்கு முன் காலையில் இருந்து தன்னுடைய மழை ஆட்டத்தை மீண்டும் தொடங்கியது.

சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் மழை வெளுத்து வாங்கியது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரத்திலும் இடைவெளி விட்டுவிட்டு மழை பெய்தது. ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும், பல இடங்களில் கனமழையும் கொட்டித்தீர்த்துள்ளது.

இப்படியாக வட மாவட்டங்களிலும் டித்வா புயல் வலுவிழந்த நிலையிலும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 18 மணி நேரத்துக்கும் மேலாக நிலைகொண்டு, மழையை கொட்டியது. இதனால் சென்னையிலும், புறநகர் பகுதிகளில் சில இடங்களிலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. நேற்று முன்தினம் காலை தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்த நிலையிலும், வட மாவட்டங்களில் மழையை கொடுத்தபடியே இருந்தது. பின்னர், சென்னையையொட்டிய கடல் பகுதிகளிலேயே தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தாழ்வுப் பகுதியாகவும் வலுகுறைந்து போனது.

‘டித்வா' புயல் வலுவிழந்து போன நிலையில், அடுத்துவரும் நாட்களில் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு எப்படி இருக்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தரிடம் தெரிவிக்கையில், “புயல் கரையை கடந்த நிலையில், அடுத்ததாக கிழக்கு திசை காற்றின் ஊடுருவல் ஆரம்பித்துவிடும். 

இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் அதிகாலை மற்றும் காலையிலும், உள்மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் வருகிற 6-ம் தேதி (சனிக்கிழமை) வரை மழை தொடரும். அதன் பின்னர் சிறிய இடைவெளி ஏற்படும். டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும். இந்த பருவமழை காலத்தில் டிசம்பர் மாதத்திலும் நல்ல மழை இருக்கிறது” என்று அவர் கூறினார். 

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், இன்று ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து