எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன், ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.
இருவரும் அரைசதம்...
அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி (16), பென் டக்கெட் (27), ஜேக்கப் பெத்தேல் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 57 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இருவரும் அரைசதம் கடந்தனர்.
211 ரன்கள் குவிப்பு...
இங்கிலாந்து அணி 45 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருக்கும்போது, வெளிச்சமின்மை காரணமாக முதல்நாள் ஆட்டம் முடிவடைந்தது. ஜோ ரூட் 72 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 78 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க், நேசர், போலண்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சிட்னி திடலில் மரியாதை
முன்னதாக இந்த போட்டி துவங்கும் முன்பு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில், யூதா்களின் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டங்களுக்காக கடந்த டிச.14ஆம் தேதி ஏராளமானோா் கூடியிருந்தனா். அப்போது 2 பயங்கரவாதிகள் நடத்திய மோசமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில், பயங்கரவாதிகளில் ஒருவா் உள்பட மொத்தம் 16 போ் உயிரிழந்தனா். இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், காவல்துறையினர், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டு சிட்னி திடலில் மரியாதை செலுத்தப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


