முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவுக்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்

வியாழக்கிழமை, 8 ஜனவரி 2026      உலகம்
Trump 2023 03 05

வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதியளிப்பதாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டுகிறார். மேலும் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் தனிப்பட்ட முறையில் உறுதியளித்ததாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

ஆனால், இதுதொடர்பாக எந்தவித உரையாடலும் நடக்கவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கினால் வரி விதிப்பு அதிகரிக்கப்படும் என்று ட்ரம்ப் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அடுத்த வாரமே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எக்ஸ் தளத்தில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து