முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை உடனடியாக வெளியிட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 16 ஜனவரி 2026      இந்தியா
Supreme-Court 2024-11-269

புதுடெல்லி, கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

கேரளாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. அவற்றை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது. அப்போது வாக்காளர் பட்டியலில் இருந்து 24 லட்சத்துக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருந்த வரைவு வாக்காளர் பட்டியல் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

 மேலும் நீக்கப்பட்டவர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவிப்பதற்கு போதுமான அவகாசம் அளிக்கப்படவில்லை என்றும், நீக்கப்பட்டவர்களின் விவரங்களும் வெளியிடப்படவில்லை என்றும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கோர்ட்டில் வாதிட்டனர். இதைத்தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயரை வெளியிட தேர்தல் கமிஷனை நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் நீக்கப்பட்டவர்கள் தங்கள் முறையீட்டை தெரிவிப்பதற்கு வசதியாக மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்க பரிந்துரைக்கவும் கேட்டுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து