முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் அமையும் முதல் நீருக்கடியில் செல்லும் சாலை - ரயில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2026      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையவுள்ள சாலை-ரெயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது உலகின் 2வது சாலை-ரயில் சுரங்கப்பாதையாக இருக்கும். முதலாவது ஐரோப்பாவில் அமைந்துள்ளது.

இரட்டை வழிகள் கொண்ட இந்த பாதையின் ஒரு பகுதி ரெயில் பாதையாகவும், மற்றொரு பகுதி வாகனங்கள் செல்லும் சாலையாகவும் இருக்கும். அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் அடியில் 15.79 கி.மீ தூரத்திற்கு ரூ.18,662 கோடி செலவில் இந்த சாலை-ரயில் சுரங்கப்பாதை கட்டப்பட உள்ளது.

இது அசாமில் உள்ள கோப்பூர் மற்றும் நுமாலிகரை இணைக்கும். பயண நேரத்தை சுமார் 6 மணி நேரத்திலிருந்து வெறும் 20 நிமிடங்களாக குறைக்கும். முன்னதாக அசாம் சென்ற பிரதமர் மோடி, அவசர காலங்களில் விமானங்கள் தரையிறங்கும் சாலையும், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆறு வழிச் சாலைப் பாலத்தையும் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து