முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2026      இந்தியா
Macron 2023-10-24

புதுடெல்லி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவி மேடம் பிரகிட் மேக்ரான் ஆகியோர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகின்றனர். அதிபர் மேக்ரான் இந்தியாவில் நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

 

வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய துறையில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிப்ரவரி 17-ம் தேதி மும்பையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். மும்பையில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், டெல்லியில் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தார். இதைத்தொடர்ந்து, அதிபர் மேக்ரானின் சுற்றுப்பயணம் அமைய உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து