முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் பெண்கள் வழிபடும் விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது ஏப.7 முதல் விசாரணை: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு

திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2026      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, சபரிமலையில் பெண்கள் வழிபடும் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் மீது 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதிமுதல் விசாரணையைத் தொடங்கும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்ய காந்த் உத்தரவிட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வழிபடுவதற்கு இருந்துவந்த தடையை கடந்த 2018-இல் நீக்கிய சுப்ரீம் கோர்ட், இந்தப் பாலினப் பாகுபாடு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தீா்ப்பளித்தது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று இத்தீா்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

கேரளம் முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வித்திட்ட இத்தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மற்றும் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சில ஆண்டுகளாக ஓய்ந்திருந்த இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி அமர்வில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய தலைமை நீதிபதி, இந்த வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதிமுதல் விசாரணையைத் தொடங்கும் எனத் தெரிவித்தார்.

மேலும், தலைமை நீதிபதியின் உத்தரவில் தெரிவித்திருப்பதாவது, “தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோருபவர்களின் மனுக்கள் ஏப்ரல் 7 முதல் 9 வரையிலும், எதிர்ப்பவர்களின் மனுக்கள் ஏப்ரல் 14 முதல் 16 வரையிலும் நடைபெறும். இறுதி வாதங்கள் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குறிய நேர அட்டவணையை அனைத்து தரப்பினரும் கடைபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து