முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

வியாழக்கிழமை, 5 மார்ச் 2026      தமிழகம்
Pramalatha 2025-08-29

சென்னை, தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என்று பிரேமலதா விஜயகாந் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.விற்கு மாநிலங்களவை சீட் ஒன்று தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கட்சி சார்பில் தே.மு.தி.க. கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதிஷ்-க்கு வழங்கப்பட்டது. நேற்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்தபின்பு தே.மு.தி.க. கட்சியின் அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த்- உடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தே.மு.தி.க.விலுள்ள லட்சக்கணக்கான தொண்டர்களில் எல்.கே. சுதிஷ்-ம் ஒருவராவார். அவர் தே.மு.தி.க. கட்சி ஆரம்ப காலம் முதலே கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்து தான் இன்று மாநிலங்களவை உறுப்பினராக செல்ல இருக்கிறார். முதன்முதலில் தேசியத்திலும் இந்திய அளவில் ஜனநாயகக்கடமை ஆற்ற இருக்கும் சுதிஷ்க்கு அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தே.மு.தி.க.வை சாராத மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. எப்போதோ மாநிலங்களவை சீட் கிடைத்திருக்க வேண்டும், தற்போது தான் கிடைத்திருக்கிறது.தி.மு.க. கூட்டணி இந்த முறை 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து