முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் எங்களிடம் ராணுவ உதவி கேட்கவில்லை: ரஷ்ய அறிவிப்பு

வியாழக்கிழமை, 5 மார்ச் 2026      உலகம்
Putin 2024 08 11

மாஸ்கோ, ஈரான் தங்களிடம் எந்தவொரு ராணுவ உதவியையும் கேட்கவில்லை என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல்களில் இதுவரை 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போரில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் இஸ்ரேலின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கு நீண்டகால கூட்டாளியான ஈரான் தங்களிடம் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கேட்கவில்லை என வியாழக்கிழமை (மார்ச் 5) ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து