முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை: பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வர் கண்டனம்

வியாழக்கிழமை, 12 மார்ச் 2026      தமிழகம்
stalin 2025-01-06

சென்னை, பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலிருந்து அவர் நூலிழையில் உயிர் தப்பினார். முன்னாள் முதல்வர், துணை முதல்வர்  உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் இப்படியொரு அசம்பாவித சம்பவம் நடந்திருப்பது ஜம்முவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- மரியாதைக்குரிய டாக்டர் பரூக் அப்துல்லா மீதான படுகொலை முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற வன்முறைச் செயல்கள் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை அறிந்து நிம்மதி அடைகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து