முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் சரிந்த தங்கம் விலை

வியாழக்கிழமை, 12 மார்ச் 2026      தமிழகம்      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னை, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,970-க்கு விற்பனையானது. 

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த 1-ம் தேதி அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 2-ந்தேதியில் இருந்து தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது. கடந்த 7-ந்தேதி தங்கம் விலை அதிகரித்து சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400-க்கும் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.15,050-க்கும், 9-ந்தேதி சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கும், ஒரு கிராம் ரூ.14,950-க்கும், நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400-க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.15,050-க்கு விற்பனை விற்பனையானது.

இந்நிலையில் தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையானது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து ரூ.1,19,760-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,970-க்கு விற்பனையானது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 10 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி 2.90 லட்சத்துக்கும் விற்பனையானது.

கடைசி 5 நாட்கள் தங்கம் விலை:

1) 11-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,760.

2) 11-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,960.

3) 10-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400.

4) 09-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600.

5) 08-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து