முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெறும் ஓ.பி.சி. தேர்வாளர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்குங்கள் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 12 மார்ச் 2026      தமிழகம்
Stalin 2024-11-26

சென்னை, அரசியலமைப்பின் சமத்துவநெறியோடு செயல்பட்டு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். 

ஓ.பி.சி. கிரீமிலேயர் பிரிவினர் நிர்ணயம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின்  தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெறும் ஓ.பி.சி. தேர்வாளர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ஓ.பி.சி. மக்களின் நீதிக்கான பல்லாண்டுப் போராட்டத்துக்கு மாபெரும் வெற்றி! ஓ.பி.சி. கிரீமிலேயர் பிரிவினர் நிர்ணயம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன். இத்தீர்ப்பானது, கிரீமிலேயர் நிர்ணயத்தின்போது ஊதிய வருமானத்தையும் தொழில் அல்லது சொத்து மூலமாக ஈட்டும் வருமானத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது எனக் கூறியுள்ளது.

ஓ.பி.சி. மக்களின் நியாயமான உரிமைகள் கிடைக்காமல் போவதில் இருந்து பாதுகாக்கிறது. குடிமைப் பணித் தேர்வுகளுக்கான தகுதி வரையறை தொடர்பான ஐகோர்ட்டுகளின் தீர்ப்புகளை உறுதிசெய்துள்ளது. பல்வேறு துறைகளின் வேலைவாய்ப்புகளில் ஓ.பி.சி. மக்களுக்கு எதிராக இருந்த பாகுபாட்டை நிராகரித்திருக்கிறது. இட ஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கானது எனும் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

எனினும், இந்த வழக்கில் உண்மையாகவே பிற்படுத்தப்பட்ட ஓ.பி.சி. பிரிவினர் பலரின் நியாயமான உரிமையை மறுக்கும் நிலைப்பாட்டை என்.டி.ஏ. அரசு எடுத்து வாதாடியது. அது மட்டுமில்லாமல், முன்னேறிய வகுப்பினருக்கான பொருளாதார ரீதியான இ.டபுள்யூ.எஸ். இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து, இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படையாக அரசியலமைப்புச் சட்டம் வகுத்துத் தந்த வரையறையை மீறியது.

மண்டல் குழு அடிப்படையிலான இட ஒதுக்கீடு அமலுக்கு வந்து முப்பது ஆண்டுகளாகியும், நாட்டின் பல முன்னணி உயர்கல்வி நிறுவனங்களிலும் மத்திய அரசுப் பணிகளிலும் பல ஓ.பி.சி. பணியிடங்கள் இன்றும் நிரப்பப்படாமலே உள்ளன. மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்தியத் தொகுப்பில் 27% ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை உறுதிசெய்தது உள்ளிட்ட பலவற்றிலும் திமுக சமூகநீதிக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறது. சமூகநீதிக்கான நம் போராட்டம் தொடரும்.

ஏற்கெனவே குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் தங்களுக்கான இடங்கள் மறுக்கப்பட்ட ஓ.பி.சி. தேர்வாளர்களுக்கு மத்திய அரசு கூடுதல் பணியிடங்களை உருவாக்கி, அரசியலமைப்பின் சமத்துவநெறியோடு செயல்பட்டு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து