முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு: கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விநியோகிக்க தடை

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2026      தமிழகம்
Petrol-Diesel 2024-10-30

சென்னை, பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. 

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் போர் காரணமாக மேற்கு ஆசிய நாடுகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சமையல் கியாஸ் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கருதிய பொதுமக்கள் தாங்கள் 'புக்' செய்த சிலிண்டர்கள் தங்கள் வீடு தேடி வரும் வரை காத்திருக்காமல் நேரடியாக கியாஸ் ஏஜென்சிகளுக்கு சென்று வாங்கிச் செல்லும் நிலையும் நிலவி வருகிறது.

இந்தநிலையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற தகவல் காட்டுத்தீ போல் தமிழகம் முழுவதும் பரவியது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் 3-வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பி வருகின்றனர். சென்னையில் தியாகராயநகர், அண்ணாநகர், மாம்பலம், ராயப்பேட்டை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பினர்.

பல பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் பெட்ரோல் டேங்கை முழுமையாக நிரப்பி கொண்டனர். இதுதவிர குடிநீர் கேன், பாட்டில்களிலும் பெட்ரோல், டீசல் வாங்கி சென்றனர். தினசரி வேலை, அலுவலக பயணம் மற்றும் அவசர தேவைகளுக்கு வாகனங்கள் அவசியமாக இருப்பதால் எந்தவித சிக்கலும் ஏற்படாமல் இருக்கவே முன்கூட்டியே எரிபொருள் நிரப்பிக் கொள்கிறோம் என்றும், தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்கிறோம் என்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. பாட்டில்கள், கேன்களில் கொண்டு செல்லப்படும் பெட்ரோலால் பெரும் விபத்து ஏற்படலாம் என்றும், பெட்ரோல் நிலையங்கள் இதுபோன்று பாதுகாப்பற்ற முறையில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என்றும், பெட்ரோல் நிலையங்கள் வாகனங்களில் மட்டுமே பெட்ரோல்களை நிரப்ப வேண்டும் என்பதே சட்ட விதி என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து