எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கவும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்கிட வேண்டுமென்றும் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
1.12 கோடி வீடுகளுக்கு...
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது; தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான குடிநீர் வழங்குவதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது. கிராமப் பகுதிகளிலுள்ள 1.25 கோடி வீடுகளில், 1.12 கோடி வீடுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் குழாய்கள் மூலம் இணைப்புகளை வழங்கி, ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாடு பெருத்த முன்னேற்றத்தைச் சாதித்துள்ளது. இதற்கிடையில் இந்த இயக்கத்தினை மேலும் விரிவாக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவினை வரவேற்கிறேன்.
45 புதிய கிராமங்கள்....
ஜல் ஜீவன் மிஷன் இயக்கத்தின் முதல் கட்டத்தில், தமிழ்நாடு 45 புதிய பல கிராமங்களை உள்ளடக்கிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும், 56 பழைய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும் மற்றும் 21,258 ஒற்றை கிராமத் திட்டங்களையும் மொத்தமாக 18,123 கோடி ரூபாய் செலவில் எடுத்துள்ளது. அவற்றில் அனைத்து ஒற்றை கிராம குடிநீர்த் திட்டங்கள், பல கிராமங்களை அடக்கிய 101 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் பழைய குடிநீர்த் திட்டங்களில் புனரமைப்புத் திட்டங்களாக 92 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நடைமுறையில் முன்னேற்றத்தில் உள்ளன.
நிலுவையில் நிதி....
ஆனால், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பங்கு என ரூபாய் 5,914 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 3,112 கோடி நிலுவையில் உள்ளதாகவும், 2024–25 ஆண்டுக்காக தமிழ்நாட்டிற்கு ரூபாய் 2,434 கோடி ஒதுக்கப்பட்ட போதிலும், ரூ.732 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. 2024 செப்டம்பர் முதல் எந்த நிதியையும் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெறவில்லை.
சொந்த நிதியிலிருந்து...
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர்த் திட்டங்களில் பணிகளின் முன்னேற்றத்தை நிலைநாட்டுவதற்கும், உரிய காலத்தில் இந்தத் திட்டத்தினை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கும் தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து 2,550 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. நடைமுறையில் உள்ள ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களின் நிறைவேற்றத்தை உறுதி செய்திட ஏதுவாக நிலுவைத் தொகையான 3,112 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க, தாமதமின்றி பிரதமர் தலையிட வேண்டும்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டம்...
மேலும் ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட ஒகேனக்கல் (கட்டம்-3) கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.8,428 கோடி செலவில் செயல்படுத்திட ஜல் சக்தி அமைச்சகத்தின் மாநிலத் திட்ட அனுமதி குழுவில் 15.06.2023 அன்று அனுமதிக்கப்பட்டது. அதில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பங்காக ரூ.2,283 கோடி அனுமதிக்கப்பட்டது.
முன்னெடுப்புப் பணிகள்...
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் வழங்கப்பட்ட உறுதியின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தில் முன்னெடுப்புப் பணிகளை தொடங்கியது. ஆனால் மத்திய குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புத் துறை, இத்திட்டத்தினை நீட்டிக்க அனுமதி பெறும் வரை, மத்திய அரசின் உதவியை தற்போது வழங்க இயலாது எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த முக்கியமான திட்டத்திற்கு இந்தக் கட்டத்தில் மத்திய அரசு தனது ஆதரவிலிருந்து பின்வாங்குவது என்பது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மக்களுக்குப் போதுமான குடிநீர் வழங்குவதை பாதிக்கும்.
7,590 கோடி ரூபாய்...
மத்திய அரசின் சமீபத்திய ஜல் ஜீவன் திட்டத்தினை விரிவாக்கம் செய்யும் முடிவினைக் கருத்தில் கொண்டு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்கிட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு அரசு ஜப்பான் பன்னாட்டு முகமையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தினை தொடர இயலும். அதோடு, கூடுதலாக 10 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை சுமார் 7,590 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்திட திட்டமிட்டுள்ளது. இதில் திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, கரூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் உள்ளடக்கியுள்ளதாகவும், இந்தப் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு ஜல் ஜீவன் 2.0 திட்டத்திற்கு நிதி ஒப்பளிப்பு செய்திட வேண்டும்.
பிரதமர் தலையிட....
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஏதுவாக, மத்திய அரசு தனது ஆதரவை தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என நம்புகிறேன். இவ்விஷயத்தில் இந்தியப் பிரதமர் ஆதரவினையும், விரைவான தலையீட்டினையும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தூத்துக்குடியில் மாணவி கொலை வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு
13 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அ
-
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு: கனிமொழி எம்.பி. தகவல்
13 Mar 2026தூத்துக்குடி, தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடுவார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி.. தேர்தல் அறிவிப்பே இன்னும் வரவில்லை.
-
சுட்டு வீழ்த்தப்பட்டதா..? ஈராக்கில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க விமானம்-4 பேர் பலி
13 Mar 2026தெஹ்ரான், ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் பயணித்த பணியாளர்கள் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.581.65 கோடி மதிப்பிலான அனில் அம்பானியின் சொத்துகள் முடக்கம்
13 Mar 2026புதுடெல்லி, கோவா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.581.65 கோடி மதிப்பிலான
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு நாளை நேரில் ஆஜராகுகிறார் விஜய்
13 Mar 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விஜய் நாளை நேரில் ஆஜராகுகிறார்.
-
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026சென்னை, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் என்.டி.ஏ.
-
பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு: கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விநியோகிக்க தடை
13 Mar 2026சென்னை, பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத
-
தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
13 Mar 2026சென்னை, இளைஞர்களே தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மாதவிடாய் விடுப்பு அளித்தால் பெண்கள் வேலை பறிபோகும்: சுப்ரீம் கோர்ட் கருத்து
13 Mar 2026புதுடெல்லி, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டுவந்தால் அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும், நிறுவன உரிமையாளர்கள், பெண்களை
-
இந்திய பங்குச்சந்தைகள் 3-ம் நாளாக கடும் வீழ்ச்சி : ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு
13 Mar 2026மும்பை, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-ம் நாளாக நேற்று (மார்ச் 13) கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமானது.
-
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி: பார்லி., மக்களவை ஒத்திவைப்பு
13 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
-
கள்ளச்சந்தையில் விற்க சிலிண்டர்கள் பதுக்கல்: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
13 Mar 2026மதுரை, மதுரையில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை காரணம் காட்டி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 398 எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் தமிழ்நாட்டில் முத
-
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து 3-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026புதுடெல்லி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக எல்.பி.ஜி.
-
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட 5 மாநில தோ்தல் தேதி மாா்ச் 16-ல் அறிவிப்பு?
13 Mar 2026புதுடெல்லி, தமிழகம், கேரளம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டப்பேரவை மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு மாா்ச் 15 அல்லது 16-ஆம் தேதி தோ்தல் தேதியை இந்திய தோ்த
-
சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1,843 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Mar 2026சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.03.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம்,
-
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
13 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்
13 Mar 2026சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.


