முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2026      தமிழகம்
EPS 2024-11-02

சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுடன் ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இடம்பெற்றுள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பேசிவந்த டி.டி.வி. தினகரன் திடீரென பா.ஜ.க.வின் அழைப்பை ஏற்று என்.டி.ஏ. கூட்டணியில் இணைவதாக அறிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டுவர தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்பதற்காக கூட்டணியில் இணைந்ததாகக் கூறினார்.

தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாடுகளில் இபிஎஸ், டி.டி.வி. தினகரன் இருவரும் ஒன்றாக பங்கேற்றனர். இதையடுத்து நேற்று கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று வரும் 17 ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்தும் ஆலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள்கள் புழக்கம் முதலானவற்றைக் கண்டித்து மார்ச் 17-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து