எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.- 29 - மகன் ஹரியை மீட்டுத்தரக்கோரி நடிகை வனிதா கமிஷனர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார். பின்னர் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் அறிவித்தார் . போலீசார் அவரை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது குறித்த விபரம் வருமாறு:
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி யாருடன் இருப்பது என்பது தொடர்பாக அவருக்கும், அவரது முதல் கணவர் ஆகாசுக்கும் இடையே nullண்ட நாட்களாக தகராறு இருந்து வருகிறது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது. விஜய் ஸ்ரீஹரியை வாரத்தில் 3 நாட்கள் வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் விஜய் ஸ்ரீஹரி, வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான். தற்போது விருகம்பாக்கத்தில் ஆகாசுடன் வசித்து வருகிறான்.ஆனால் கோர்ட்டு உத்தரவின்படி விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த பல மாதங்களாக வனிதா போராடி வருகிறார்.
இதுதொடர்பாக டி.ஜி.பி. அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகியவற்றில் வனிதா புகார் செய்துள்ளார். விஜய் ஸ்ரீஹரி தன்னுடன் வராதது குறித்து வனிதா கூறும்போது, அவனை மிரட்டி வைத்துள்ளனர். என்னைப் பார்த்தாலே பயந்து நடுங்குகிறான் என்று குற்றம் சாட்டினார். தனது தந்தை விஜயகுமார் மீதும், ஆகாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை அவர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக அடங்கிப் போய் இருந்த வனிதா விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது.சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து வனிதா புதிய புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கோர்ட்டு உத்தரவின் பேரில் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி மத்திய சென்னை இணை கமிஷனர் சங்கர் ஆலோசனையின் பேரில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ஜெபகர்சாலி நேற்று மாலை வனிதாவிடம் விசாரணை நடத்தினார். பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள ஆகாசின் வீட்டுக்கு பெண் போலீசார் வனிதாவுடன் சென்றனர். அங்கிருந்த விஜய் ஸ்ரீஹரி, வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான். இதனால் போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர். வனிதாவும் வீட்டுக்கு சென்று விட்டார்.
பின்னர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வனிதா திடீரென வந்தார். எனது மகனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று கூறிய அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார். இதையடுத்து போலீசார் மீண்டும் ஆகாசின் வீட்டுக்கு வனிதாவை அழைத்துச் சென்றனர். அப்போதும் விஜய் ஸ்ரீஹரி அவருடன் செல்ல மறுத்து விட்டான். இதுதொடர்பாக வனிதா கூறியதாவது:-
வாரத்தில் 3 நாட்கள் (வெள்ளி, சனி, திங்கள்) விஜய் ஸ்ரீஹரி என்னுடன் இருக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை நான் ஓயமாட்டேன். ஆகாசிடமிருந்து அவனை மீட்காமல் விடமாட்டேன். நிச்சயம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே நேற்று வனிதா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கமிஷனர் அலுவலக வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் உங்களை சோதனை செய்த பின்னர்தான் உள்ளே அனுமதிப்போம் என்று கூறினர். இதற்கு வனிதா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் அவர் மத்திய சென்னை இணை கமிஷனர் சங்கரை சந்தித்து பேசினார். அப்போது நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அவர் விளக்கி கூறினார்.
பின்னர் மதியம் 12.45 மணி அளவில் வெளியே வந்த அவர் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மகன் ஸ்ரீஹரியை கூடிய விரைவில் என்னிடம் மீட்டு ஒப்படைக்க வேண்டும். கடந்த 7 மாதமாக குழந்தையை மீட்க போராடுகிறேன். விருகம்பாக்கம் போலீசார் குடிவிட்டு வந்து கலாட்ட செய்வதாக பொய்யான புகார் தெரிவித்துள்ளனர். இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் எந்தஒரு தாய்கும் தீங்கு ஏற்படாது. என் மகன் எனக்கு கிடைக்காவிட்டால் துளிகூட தண்ணீர் குடிக்காமல் உண்ணாவிரதம் இருப்பேன் என்று வனிதா விஜயகுமார் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
சட்டப்பேரையில் 2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
16 Feb 2026சென்னை, சட்டசபையில் 2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
-
எம்.என்.ராஜம்- எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Feb 2026சென்னை, தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி
-
இருப்பது உண்மைதான்: வேற்றுக்கிரகவாசிகள் குறித்து பராக் ஒபாமா பரபரப்பு தகவல்
16 Feb 2026நியூயார்க், வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா தெரிவித்துள்ளாா்.
-
தமிழ்நாட்டில் 8,400 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.5,980 கோடி முதலீட்டிற்கான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
16 Feb 2026சென்னை, தமிழகத்தில் 8,400 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.5,980 கோடி முதலீட்டிற்கான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்
-
நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பிப். 21ல் கனமழை பெய்ய வாய்ப்பு
16 Feb 2026சென்னை, தமிழகத்தில் வரும் பிப்.
-
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்
16 Feb 2026புதுடெல்லி, நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
-
ரூ.542.02 கோடி செலவில் கல்விசார் கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Feb 2026சென்னை, ரூ.542.02 கோடி செலவில் பல்வேறு கல்விசார் கட்டிடங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர்
16 Feb 2026சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் தென்காசி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர் இணைந்தார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
16 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆந்திரா அரசுக்கு பில்கேட்ஸ் பாராட்டு
16 Feb 2026அமராவதி, விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆந்திரா அரசுக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் த.வெ.க.வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு
16 Feb 2026புதுச்சேரி, தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
கேரளாவில் உறுப்பு தானம் மூலம் 5 பேரை வாழவைத்த 10 மாத பெண் குழந்தைக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
16 Feb 2026திருவனந்தபுரம், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை தனது உறுப்புகள் மூலம் 5 பேரை காப்பாற்றிய 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இ
-
சபரிமலையில் பெண்கள் வழிபடும் விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது ஏப.7 முதல் விசாரணை: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு
16 Feb 2026புதுடெல்லி, சபரிமலையில் பெண்கள் வழிபடும் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் மீது 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வருகின்ற ஏப்ரல் 7 ஆம் த
-
தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொசுக்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
16 Feb 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் கொசுக்களை ஒழிக்க மருந்தடிக்கவும், கொசு ஒழிப்புப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளதா என்று ஆய்வு செய்யவும், காய்
-
ஏ.ஐ. உச்சி மாநாட்டை நடத்த இந்தியா மிக சரியான இடம்: ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு
16 Feb 2026நியூயார்க், உலகின் மிகவும் வெற்றிகரமான வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ள இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்துவதற்கு சரியான இடம் என்று ஐ.நா.சபை பொதுச்செயலாள
-
சூடானில் துணை ராணுவம் தாக்குதல்: பொதுமக்களில் 6 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. குற்றச்சாட்டு
16 Feb 2026கார்டும், துணை ராணுவப் படையினர் நடத்திய கோரத் தாக்குதலில் ஒரே வாரத் தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை
-
பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகள் அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்
16 Feb 2026சென்னை, பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
ஜனநாயகத்துக்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: இந்திய தேர்தல் ஆணையம் நூதன முறையில் பிரச்சாரம்
16 Feb 2026டெல்லி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், நூதன பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளது.
-
புது டெல்லியில் ஏ.ஐ. உச்சி மாநாடு தொடக்கம்: ஏ.ஐ. வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
16 Feb 2026புது டெல்லி, புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா ஏ.ஐ. உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும், ஏ.ஐ.
-
இன்றைய நாள் எப்படி?
16 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Feb 2026- ஶ்ரீசைலம், திருவைகாவூர், திருக்கோகர்ணம், காளஹஸ்தி கோவில்களில் சிவபெருமானுக்கு திருக்கல்யாணம்.
- நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் லட்ச தீபம்.


