முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிக்கையாளர் ஜோதிர்மாயி டே சுட்டுக்கொலை

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை,ஜூன்.- 13 - மும்பையில் பட்டப்பகலில் மூத்த செய்தியாளர் ஜோதிர்மாயி டே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  மும்பையில் இருந்து வெளியாகும் மிட் டே நாளிதழில் கிரைம் செய்திகளை ஜோதிர்மாயி டே எழுதி வந்தார். குறிப்பாக, நிழல் உலக தாதாக்கள் பற்றி பல திடுக்கிடும் தகவல்களை எழுதி பரபரப்பை உண்டாக்கியவர். தாவூத் இப்ராகிம் உட்பட பல தாதாக்களின் கூலி படை செயல்களை அவர் எழுதி வந்தார்.
இந்நிலையில் போவாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டு விட்டு தப்பி விட்டனர். இதையடுத்து மருததுவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜோதிர்மாயியை சோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பட்டப்பகலில் பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜோதிர்மாயி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜோதிர்மாயி டே, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட நாளிதழ்களில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago