முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழைக்கால கூட்டத் தொடரில் லோக்பால் சட்டம்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

சென்னை,ஜூலை.19 - நடைபெறவுள்ள மழைக்கால கூட்டத் தொடரில் லோக்பால் சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். 

ஸ்மாட் வணிக பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 1 ம் தேதி தொடங்குகிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத் தொடர். இதில் பல்வேறு முக்கியமான சட்டங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன. குறிப்பாக லோக்பால் சட்டத்தை கொண்டு வர தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

நாட்டின் எழை மக்களுக்கு உணவு, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கட்டாய உணவு, பாதுகாப்பு, சட்ட மசோதா கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெறுபவர்களுக்கு அண்மைக் காலமாக பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே தகவல் அறியும் நபர்களுக்கு பாதகம் ஏற்படுவதை தடுக்கும் வகையிலான சட்டம், காப்பீட்டு திட்டம் ஆகியவையும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பெண்களுக்கு 39 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை கொண்டு வருவதற்காக பா.ஜ.க. திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். அதன்படி இச்சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் கோரிக்கைகளும், புகார்களும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். கூட்டத் தொடர் நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். ஆளும் கட்சியினர் கொண்டு வரும் சட்ட மசோதாக்கள் மீது எதிர்க்கட்சிகள் விவாதம் செய்யலாம். ஆனால் கூட்டத் தொடரை முடக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago